அடிச்சிட்டான்யா அடிச்சிட்டான்!! ஆட வந்த பெண்ணுக்கு கிடைத்த அதிர்ச்சி: வீடியோ வைரல்
ஆட வந்து அடி வாங்கிய பெண். இந்த வீடியோவைப் பார்ப்பவர்களால், தங்கள் கண்களையே நம்ப முடியாமலும் போகலாம்.
Viral Video: இணைய உலகம் ஒரு வேடிக்கையான உலகம். இங்கு பல வித வீடியோக்களை நாம் தினமும் காண்கிறோம்.
இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன.
சமூக ஊடகங்களில் (Social Media) பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. சமீப காலங்களில் திருமணங்கள் மற்றும் விருந்துகளின் வீடியோக்கள் இணையத்தில் பட்டையைக் கிளப்பி வருகின்றன. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தை கலக்கி வருகின்றது.
திருமணங்கள் மற்றும் பார்ட்டிகளில் நடனம் மிகவும் பிரபலம். இந்தியாவில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் இந்த பழக்கம் உள்ளது. எந்த விசேஷமான தருணமாக இருந்தாலும், அதில் மக்கள் நடனமாடுவதைக் காண முடிகின்றது.
இந்த நடன வீடியோக்களில் பல மிகவும் அழகாகவும், அற்புதமாகவும் இருக்கின்றன. இவை காண்பவர்களை மகிழ்விக்கச் செய்கின்றன. தற்போது இதுபோன்ற ஒரு நடன வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. ஆனால், இதைப் பார்த்தால் மகிழ்ச்சி இருக்குமோ இல்லையோ, அதிர்ச்சி கண்டிப்பாக இருக்கும்.
இந்த வீடியோவைப் (Viral Video) பார்ப்பவர்களால், தங்கள் கண்களையே நம்ப முடியாமலும் போகலாம். இந்த வீடியோவில் பலர் ஒரு விழாவில் நடனமாடிக்கொண்டிருப்பதைக் காண முடிகின்றது. ஆனால், அப்போது திடீரென ஒருவர் தனது பார்ட்னர் சரியாக நடனம் ஆடாததால், அவரை கன்னத்தில் அறையத் தொடங்குகிறார்.
ALSO READ | அண்ணாத்த படத்தை மிஞ்சிய அண்ணன் தங்கை பாசம்: மனதை உருக்கும் வைரல் வீடியோ
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பார்க்கும் நமக்கே இப்படி இருந்தால், அடி வாங்கிய அந்த பெண்ணுக்கு எப்படி இருக்கும் என அனைவரும் பரிதாபப்படுகின்றனர்.
தவறான நடன அசைவுகளால் அடி வாங்கிய பெண்
வைரலாகி வரும் இந்த வீடியோவில், பல தம்பதிகள் ஒரு நிகழ்ச்சிகளுக்கு சென்றிருப்பதை காண முடிகின்றது. இவர்கள் அனைவரும் ஜோடிகளாக நடனமாடுகிறார்கள். ஆனால் இவர்களில் ஒரு ஜோடி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
இந்த வீடியோவில், ஒருவர் தனது ஜோடியை மிக வேகமாக நடனமாட வற்புறுத்துவதைக் காண முடிகின்றது. இதனால் டென்ஷன் ஆன அந்த பெண், தவறான நடன அசைவுகளை செய்யத் தொடங்குகிறார். இதைப் பார்த்த அந்த நபருக்கு கோவம் வருகிறது.
கோவத்தின் மிகுதியால், அவர் தனது ஜோடியை அறையத் தொடங்குகிறார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அருகில் இருந்த ஜோடி அவரைத் தடுக்க முயற்சிக்கிறார்கள். ஆனால், அவர் அடங்குவதாக இல்லை. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பார்க்கப்பட்டு வருகிறது.
அதிர்ச்சியூட்டும் இந்த வீடியோவை இங்கே காணலாம்:
இப்படி ஒரு நடன வீடியோவை பார்த்திருக்க மாட்டீர்கள்
சரியாக நடனமாடவில்லை என்பதற்காக ஒருவர் தனது நடன ஜோடியை அடிப்பது போன்ற வீடியோக்கள் அரிதாகவே காணப்படுகின்றன. ஆனால், கோவப்பட்டு அடிக்கும் நபரும் மிகச்சிறப்பாக ஆடுகிறார் என்று கூற முடியாது. அவரும் மிக சாதாரணமாகவே ஆடுகிறார். ஆனால் தான் சூப்பராக ஆடுவதாக அவருக்கு தோன்றுகிறது போலும்!!
இந்த வீடியோவுக்கு இணையவாசிகள் (Netizens) கமெண்டுகளை அள்ளி வீசி வருகின்றனர். வீடியோவின் தலைப்பில், "தவறாக நடனமாடினால், அடி கிடைக்கும்" என்று எழுதப்பட்டுள்ளது.
ALSO READ | ஆட்டம் காட்டும் சிறுத்தை; விடாமல் துரத்தும் வனத்துறை- Watch
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR