அண்ணாத்த படத்தை மிஞ்சிய அண்ணன் தங்கை பாசம்: மனதை உருக்கும் வைரல் வீடியோ

தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ள ஒரு வீடியோவில், ஒரு திருமண நிகழ்வில் நடக்கும் சுவாரசியமான விஷயத்தைக் காண முடிகிறது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 18, 2022, 01:52 PM IST
  • தற்போது ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தை கலக்கி வருகின்றது.
  • குறிப்பாக பாசம் மிக்க அண்ணன், தங்கைகள் இந்த வீடியோவை அதிகம் பார்த்து வருகிறார்கள்.
  • வீடியோவைப் பார்த்து பலர் உணர்ச்சிவசப்பட்டு பல வித கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ளனர்.
அண்ணாத்த படத்தை மிஞ்சிய அண்ணன் தங்கை பாசம்: மனதை உருக்கும் வைரல் வீடியோ  title=

Viral Video: இணைய உலகம் ஒரு வேடிக்கையான உலகம். இங்கு பல வித வீடியோக்களை நாம் தினமும் காண்கிறோம்.

இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. 

சமூக ஊடகங்களில் (Social Media) பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. சமீப காலங்களில் திருமண வீடியோக்கள் இணையத்தில் பட்டையைக் கிளப்பி வருகின்றன. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தை கலக்கி வருகின்றது.

பரிசுகளைப் பெற யாருக்குதான் பிடிக்காது? குறிப்பாக நமக்கு பிடித்த பொருளை ஒருவர் பரிசாகக் கொடுத்தால், நம்மகிழ்ச்சிக்கு அளவே இருக்காது. அப்படித்தான் இங்கும் நடந்துள்ளது. ஆனால், இங்கு பரிசுடன் ஏகப்பட்ட பாசமும் கலந்துள்ளது. 

தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ள ஒரு வீடியோவில், ஒரு திருமண நிகழ்வில் நடக்கும் சுவாரசியமான விஷயத்தைக் காண முடிகிறது. மணமகனும் மணமகளும் திருமண மேடையில் நின்றுகொண்டிருக்கின்றனர். அப்பொது மணப்பெண்ணின் சகோதரர் மேடைக்கு வருகிறார்.  

அடுத்த நொடியே அவர் தனது சட்டைப் பையில் இருந்து ஒரு பெட்டியை எடுக்கிறார். அதைப் பார்த்து மணமகள் (Bride Video) மிகவும் மகிழ்ச்சியடைகிறார். அந்த பரிசுப் பெட்டியில் மணப்பெண்ணின் விருப்பமான தொலைபேசி உள்ளது. தனது சகோதரிக்கு ஒரு சர்பிரைசாக மணமகளின் சகோதரர் இதை அளிக்கிறார். இதைக் கண்ட மணமகளின் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை என்பதை வீடியோவில் காண முடிகின்றது. 

சகோதரரின் பாசத்தைப் பார்த்த மணமகனும் மிகவும் ஆச்சரியமடைகிறார். மணமகள் மகிழ்ச்சியடைவது அவருக்கும் மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கின்றது. 

ஆச்சரியப்படுத்திய மணமகளின் சகோதரர்

சகோதர சகோதரி உறவு மிகவும் இனிமையான ஒரு உறவாகும். தனது தங்கை எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என அண்ணன் ஆசைப்படுவது வழக்கம். அண்ணன் இருக்கும் தங்கைகள் அண்ணன்களை தங்கள் அப்பாவாகவே கருதுகிறார்கள். இந்த வைரல் வீடியோவிலும் அதுவே காணப்படுகிறது. 

சகோதரியை ஆச்சர்யப்படுத்தும் வகையில் மணமகளின் அண்ணன் மேடையில் ஏறி, மணமகளுக்கு மிகவும் பிடித்த போனை அளித்து அசத்துகிறார். அண்ணனின் இந்த செயலால், மணமகள் மகிழ்ந்து ஆச்சரியப்படுவதோடு மணமகனும் ஆச்சரியத்தில் அப்படியே நிற்கிறார். தங்கள் வாழ்க்கையின் துவக்கத்திலேயே இருவருக்கும் ஆனந்தமான ஆச்சரியம் கிடைத்துள்ளது. 

ALSO READ | இப்பவே இப்படியா? திருமண மேடையில் நடந்த காமெடி கலாட்டா: வீடியோ வைரல்

அண்ணன் தங்கை பாசத்தை காட்டும் அந்த வீடியோவை இங்கே காணலாம்:

இந்த திருமண வீடியோவை மக்கள் மிகவும் விரும்பி உள்ளனர்

இந்த வீடியோ (Viral Video) behan_bhai_ka_unlimited_pyar என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த வீடியோவை மக்கள் மீண்டும் மீண்டும் பார்த்து வருகின்றனர். குறிப்பாக பாசம் மிக்க அண்ணன், தங்கைகள் இந்த வீடியோவை அதிகம் பார்த்து வருகிறார்கள். 

இந்த வீடியோவுக்கு கமெண்ட் அளித்துள்ள ஒரு பயனர், 'ஐ லவ் யூ பிரதர்' என்று எழுதியுள்ளார். மற்றொரு பயனர், 'ஐ மிஸ் யூ பிரதர், ஐ லவ் யூ சோ மச்' என்று எழுதியுள்ளார்.

இந்த வீடியோவைப் பார்த்து பலர் உணர்ச்சிவசப்பட்டு பல வித கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ளனர். 

ALSO READ | Viral Video: உள்ளூர் ரயிலில் 'புஷ்பா’ திரைப்பட பாணியில் கலக்கும் இளைஞர்! கடுப்பில் பயணிகள்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News