திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்று சொல்லப்பட்டாலும், அந்த சொர்க்கத்திலும் சில சருக்கல்கள் இருக்கத்தான் செய்கின்றன. சில ஆண்களுக்கு மனைவியை வைத்து சமாளிப்பது பெரிய சவாலாகவே இருந்து வருகிறது. இரண்டு மனைவிகள் கொண்டவரின் நிலைமையைப் பற்றி கேட்கவே வேண்டாம்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த நிலையில், ஒரே வீட்டில் 8 மனைவிகளுடன் ஒருவர் வாழ்ந்துகொண்டிருக்குறார், அதுவும் மிக மகிழ்ச்சியாக வாழ்ந்துகொண்டிருக்கிறார் என்றால் நம்ப முடிகிறதா? நம்பினாலும், நம்பாவிட்டாலும், இது உண்மையான செய்தி!!


தாய்லாந்தில் ஒருவர் ஒரே வீட்டில் எட்டு இளம் மனைவிகளுடன் வாழ்ந்து வரும் கதை சமூக ஊடகங்களில் வைரலாக (Viral News) பரவி பல இணையவாசிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. 


ஆடிட்டி சென்ட்ரலின் கூற்றுப்படி, ஓங் டாம் சோரோட்  என்ற அந்த நபர், ஒரு டாட்டூ கலைஞர் ஆவார். அவர் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தோன்றி தனது கதையை பகிர்ந்துகொண்ட பிறகு பிரபலமானார். இந்த நிகழ்ச்சியின் வீடியோ யூடியூப்பில் மட்டும் மூன்று மில்லியனுக்கும் அதிகமான முறை பார்க்கப்பட்டதாக அந்த அறிக்கை கூறுகிறது.


நேர்காணலின் போது அவர், தனது மனைவிகள் ஒருவரோடு ஒருவர் நன்றாகப் பழகுவதாகவும், அவர்கள் அனைவரும் "இணக்கமான குடும்ப உறவை" பகிர்ந்து கொள்வதாகவும் கூறினார்.


மனைவிகளை எப்படி சந்தித்தார்?


அவர் தனது இளம் மனைவிகளை சந்தித்த விதமும் மிகவும் சுவாரஸ்யமானது. நேர்காணலின் போது, ​​சோரோட் தனது முதல் மனைவியான நோங் ஸ்ப்ரைட்டை ஒரு நண்பரின் திருமணத்தில் சந்தித்ததாக கூறியுள்ளார். தனக்கு அவரை மிகவும் பிடித்திருந்ததாகவும், தன்னை மணம் முடிக்க தயாரா என அவரைக் கேட்டதாகவும், அதற்கு நோங் ஸ்ப்ரைட்டும் ஒப்புக்கொண்டதாகவும் தெரிவித்தார். 


அதேபோல், தனது இரண்டாவது மனைவி நோங் எல்லை அவர் சந்தித்தபோது, முதல் பார்வையிலேயே காதல் மலர்ந்தது. ஆச்சரியம் என்னவென்றால், சோரோட்டின் முதல் மனைவியைப் பற்றி அறிந்திருந்தும் நோங் அவரை திருமணம் செய்து கொள்ள ஒப்புக்கொண்டார்.


மூன்றாவது மனைவியை ஒரு மருத்துவமனையிலும், தனது நான்காவது, ஐந்தாவது மற்றும் ஆறாவது மனைவிகளை முறையே Instagram, Facebook மற்றும் TikTok ஆகிய சமூக ஊடக தளங்களிலும் சந்தித்ததாக அவர் நேர்காணலில் கூறியுள்ளார். 


ஆறு மனைவிகளின் காதலும், ஆசையும் அவருக்கு போதவில்லை. தனது தாயுடன் ஒரு கோயிலுக்கு சென்றபோது, நோங் பிலிம் என்ற மற்றொரு பெண்ணைச் சந்தித்தார். பார்த்தவுடனேயே அவருடன் காதலில் விழுந்தார். தன்னை திருமணம் செய்துகொள்ள அவர் கேட்க, அந்த பெண்ணால் 'நோ' சொல்ல முடியவில்லையாம். ஓங் டாம் சோரோட்டின் ஏழாவது மனைவியானார் அந்த பெண். 


இதன் பிறகு, பட்டாயாவில் ஒரு விடுமுறையின் போது இவர் தனது எட்டாவது மனைவியான நோங் மாயை சந்தித்தார். ஆச்சரியம் என்னவென்றால், பயணத்தின் போது அவரது நான்கு மனைவிகள் அவருடன்தான் இருந்தனர். 


'மிகவும் அக்கறையுள்ள மனிதர்'


அவரது வெற்றிகரமான திருமண வாழ்க்கையின் ரகசியம் அவரது வசீகரமான தோற்றமும் மிகுந்த அக்கறை காட்டும் இயல்பும்தான் என அவரை அறிந்தவர்கள் கூறுகிறார்கள். 


டிவி சேனலிடம் பேசிய அவரது மனைவிகள் அனைவரும் அவர் "மிகவும் அக்கறையுள்ள மனிதர்" என்று ஒருமனதாக ஒப்புக்கொண்டனர்.


"அவர் எங்களை நன்றாக நடத்துகிறார், எங்களுக்குள் சண்டை வர எந்த காரணமும் இருப்பதில்லை." என்று அவர்கள் தெரிவித்தனர். 


ALSO READ | ஃபேஷன் ஷோவில் மாடல் செய்த காரியம்! வைரலாகும் வீடியோ!


குழந்தைகள்


அறிக்கையின்படி, சோரோட்டுக்கு ஏற்கனவே தனது முதல் மனைவியுடன் ஒரு மகன் உள்ளார். அவரது இரண்டு மனைவிகள் தற்பொது பிரசவித்துள்ளார்கள். 


'வெறித்தனமான காதல்'


ஏற்கனவே திருமணமான ஒருவரை திருமணம் செய்ய இந்த பெண்கள் ஏன் முடிவெடுத்தார்கள் என்று கேட்டபோது, ​​எல்லா பெண்களும் "அவரை வெறித்தனமாக காதலித்ததாக" ஒப்புக்கொண்டதாக அந்த அறிக்கை கூறுகிறது.


பணத்துக்காக பெண்கள் தன்னை திருமணம் செய்து கொண்டதாக பரவிய வதந்திகளை நிராகரித்த அவர், "எனது குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு உறுப்பினருக்கும் அவரவருக்கு ஒரு கடமை உள்ளது. மேலும் எனது மனைவிகள் உணவுப் பொருட்கள், அழகுசாதனப் பொருட்கள், கைவினைப் பொருட்கள் அன பல வித பொருட்களை வியாபாரம் செய்கிறார்கள். இதன் மூலம் எனக்கு பொருளாதார ரீதியாக உதவியாக இருக்கிறார்கள்" என்றார். 


ஏழு ஜென்மத்துக்கும் ஒரே மனைவி என்ற எண்ணத்தில் சிலர் வாழ்க்கை நடத்திக்கொண்டிருக்க, ஒரே ஜென்மத்திலேயே எட்டு மனைவிகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்துகொண்டிருக்கும் இந்த தாய்லாந்து (Thailand) நாட்டு ரோமியோ வித்தியாசமானவர்தான்!!


ALSO READ | இது ரவுடி பேபி காலம்! டிரெண்டை மாற்றிய மணமகள் ஊர்வலம்!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR