வைரல் வீடியோ: இணைய உலகம் ஒரு வேடிக்கையான உலகம். இங்கு பல வித வீடியோக்களை நாம் தினமும் காண்கிறோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. 


சமூக வலைத்தளங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 


திருமணம் என்றாலே கொண்டாட்டங்கள், சடங்குகள் என்று ஒரு புறம் இருந்தாலும், திருமண விருந்தும் ஒரு முக்கிய அம்சமாக உள்ளது. திருமணங்களில் பல வித உணவுகளை சுவைப்பதற்காகவே விருந்தினர்கள் காத்திருப்பதுண்டு. பந்தி துவங்கியவுடனேயே முந்திக்கொண்டு செல்லும் பலரை நாம் பார்த்துள்ளோம்.


திருமண விருந்து தொடர்பான ஒரு வீடியோ தற்போது வெளிவந்துள்ளது. இந்த வீடியோவில் ஒரு திருமண நிகழ்வில் சுவையான உணவை சாப்பிட அனைவரும் ஆவலாக காத்திருந்தனர்.  விருந்துக்கு மத்தியில் ஜோ என மழை பெய்யத் தொடங்குகிறது. எனினும், சிலரை மழையாலும் ஒன்றும் செய்ய முடியவில்லை. உணவின் சுவையில் மயங்கிய அவர்கள், நாற்காலிகளை குடை போல் பிடித்து உணவு உண்பதை வீடியோவில் காண முடிகின்றது. இவ்வளவு சுவையாக இவர்கள் உணவை உட்கொள்வதை பார்த்தால் அது பிரியாணியாகத் தான் இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது.


மேலும் படிக்க | ஃப்ரென்ச் ஃப்ரைஸ் சாப்பிட்ட பாட்டியின் வேற லெவல் ரியாக்‌ஷன்: வைரல் வீடியோ


உணவு மீது அளவுகடந்த மோகம் 


வைரலாகி வரும் இந்த வீடியோவில், திருமணத்திற்கு வந்த அனைத்து விருந்தினர்களும் சாப்பாட்டு பந்திக்கு வந்திருப்பதை காண முடிகின்றது. சிறிது நேரம் கழித்து அனைவரும் இருக்கைகளில் அமர்ந்து உணவை ரசிக்கத் தொடங்குகிறார்கள். ஆனால், சிறிது நேரத்திற்கெல்லாம் கனமழை தொடங்குகிறது. 
மழை பெய்யத் தொடங்கியவுடன் பெரும்பாலானோர் அங்கிருந்து ஓடத் தொடங்கிறார்கள். ஆனால் சிலர் இருந்த இடத்தை விட்டு நகராமல், நாற்காலியை குடை போல் பிடித்து, உணவை ருசித்துக் கொண்டிருக்கிறார்கள். 


அடாத மழையிலும் விடாது சாப்பாட்டை ருசித்த ஃபுட்டீசின் வீடியோ இதோ:


 



 


பலே பிரியாணி பாய்ஸ் 


இந்த வீடியோவில் இவர்கள் உணவை ருசித்து சாப்பிடும் விதத்தை பார்த்தால் இவர்களுக்கு உணவின் மேல் உள்ள காதல் நன்றாகத் தெரிகின்றது. திருமண பந்தியின் இந்த வீடியோ mr_90s_kidd என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவேற்றப்பட்டுள்ளது. இந்த வீடியோ இதுவரை 9 லட்சத்திற்கும் அதிகமான லைக்குகளையும் வியூஸ்களையும் பெற்றுள்ளது. இந்த வீடியோவுக்கு பயனர்கள் பல வித கமெண்டுகளை அள்ளி வீசி வருகிறார்கள். 


மேலும் படிக்க | சாமி பாட்டுக்கு செமயா குத்தாட்டம் போட்ட மணமக்கள்: வீடியோ வைரல்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR