Viral Video: தூங்கிக் கொண்டே ஐஸ்க்ரீம் சாப்பிடும் குட்டி ஏஞ்சல்

சிறு குழந்தைகள் செய்யும் சேட்டைகளும் குறும்புகளும் பர்ப்பதற்கே அழகு. அவர் தூங்குவதும் கூட பார்க்க அழகாகத் தான் இருக்கும். குழந்தைகளின் குறும்புகளையும் செய்கைகளையும் ரசிக்கும் போது நமது மனதில் உள்ள டென்ஷன், வருத்தம், கவலைகள் அனைத்தும் தீரும் என்றால் மிகையில்லை.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jun 29, 2022, 06:14 PM IST
  • ஆயிரக்கணக்கான வீடியோக்கள் தினமும் பகிரப்பட்டாலும், சில வீடியோக்களே சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.
  • சிறு குழந்தைகள் வீடியோக்களைப் பார்ப்பதற்கு யாருக்கு தான் பிடிக்காது.
  • இந்த வீடியோவை பார்ப்பவர்களுக்கு தங்கள் குழந்தை பருவ நாட்கள் நிச்சயம் நினைவுக்கு வரும்.
Viral Video: தூங்கிக் கொண்டே ஐஸ்க்ரீம் சாப்பிடும் குட்டி ஏஞ்சல்  title=

இணைய உலகம் தினம் தினம் ஆச்சர்யங்களை அள்ளி வழங்குவதில் நமக்கு என்றுமே குறை வைப்பதில்லை. இணைய உலகில் நம்பவே முடியாத வேடிக்கையான மற்றும் அற்புதமான வீடியோக்கள் பலவற்றை காணலாம். ஆயிரக்கணக்கான வீடியோக்கள் தினமும் பகிரப்பட்டாலும், சில வீடியோக்களே சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.

சிறு குழந்தைகள் செய்யும் சேட்டைகளும் குறும்புகளும் பர்ப்பதற்கே அழகு. அவர் தூங்குவதும் கூட பார்க்க அழகாகத் தான் இருக்கும். குழந்தைகளின் குறும்புகளையும் செய்கைகளையும் ரசிக்கும் போது நமது மனதில் உள்ள டென்ஷன், வருத்தம், கவலைகள் அனைத்தும் தீரும் என்றால் மிகையில்லை.

சிறு குழந்தைகள் வீடியோக்களைப் பார்ப்பதற்கு யாருக்கு தான் பிடிக்காது.  அந்த வகையில் சமூக வலைதளத்தில் ஒரு வீடியோ மிகவும் வைரலாகி வருகிறது. இது  நிச்சயமாக உங்களை மகிழ்விக்கும். ஐஸ்கிரீம் சாப்பிடும் போது தூங்கும் சிறுமியை கொண்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் இணையவாசிகளின் மனம் கவர்ந்து வருகிறது.

கண்களைத் திறக்க முடியாமல் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தாலும், ஐஸ்கிரீமை விட முடியாமல் தூங்கிக் கொண்டே சாப்பிடும் அந்த வீடியோ காண்போர் முகத்தில் நிச்சயம் புன்னகையை வரவழைக்கும் . காரில் சீட் பெல்ட் அணிந்தபடி அமர்ந்திருக்கும் அழகான குட்டி பெண்ணை வீடியோவில் காணலாம். அவள் கையில் ஒரு ஐஸ்கிரீமைப் பிடித்துக்கொண்டு, சாப்பிட்டுக் கொண்டே கண்களை மூடிக்கொண்டு  ஐஸ்கிரீமை சாப்பிடிகிறாள். 

மேலும் படிக்க | கொஞ்சிக் கொஞ்சி பேசி மதிமயக்கும் கிளி; வியப்பில் ஆழ்ந்த நெட்டிசன்கள்

வைரல் வீடியோவை கீழே காணலாம்:

Storyful Viral என்ற ட்விட்டர் கணக்கு அந்த வீடியோவைப் பகிர்ந்துகொண்டு உள்ளது.  இந்த வீடியோ பழையது என்றாலும் ட்விட்டரில் மீண்டும் வைரலாகியுள்ளது. மேலும் இந்த வீடியோவை பார்ப்பவர்களுக்கு தங்கள் குழந்தை பருவ நாட்கள் நிச்சயம் நினைவுக்கு வரும். 

மேலும் படிக்க | Viral Video: சொன்னதை சொல்லும் கிளிப்பிள்ளை இங்கே ‘iPhone’ ட்யூனை இசைக்கிறது..!!

மேலும் படிக்க | சேவல் மீது ஜாலியாக ரைட் செய்யும் பூனைக்குட்டி! வைரலாகும் வீடியோ!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News