Viral Video: இந்த காலத்தில் அனைவரும் பாதுகாப்புக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறோம். குறிப்பாக பெண்களின் பாதுகாப்பு கடுமையான சவால்களை எதிர்கொண்டுள்ள நிலையில், வீட்டை விட்டு வெளியே செல்லும் பெண்கள் திரும்ப வீட்டிற்கு வரும் வரை வீட்டில் இருப்பவர்கள் பதட்டத்தில்தான் உள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பொதுவாகவே மகள்கள் தந்தைகளின் தேவதைகளாக இருக்கிறார்கள். தனது மகளின் பாதுகாப்பிற்காக ஒரு தந்தை என்ன வேண்டுமானாலும் செய்வார். அதற்கு நாம் தினம் தினம் பல உதாரணங்களை பார்த்திருக்கிறோம். ஆனால் சமீபத்தில் ஒரு தந்தை செய்த ஒரு விஷயம் மகள் மீதான தந்தை பாசத்தை அடுத்த லெவலுக்கே கொண்டு சென்றுள்ளது.  இந்த சம்பவம் பாகிஸ்தானில் நடந்துள்ளது.


தனது மகள் எங்கே செல்கிறார், பாதுகாப்பாக இருக்கிறாரா என்பதை 24x7 பார்க்க, ஒரு தந்தை ஒரு வினோதமான முறையை கையாண்டுள்ளார். அவர் தனது மகளின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் மகளின் தலையில் சிசிடிவி கேமராவை பொருத்தியுள்ளார். இதன் இணைப்பை தனது மொபைல் போனில் கொண்டுள்ள அவர், ஒவ்வொரு நொடியும் தனது மகளை பார்த்தபடி அவரது பாதுகாப்பை உறுதிசெய்து கொள்கிறார்.


மேலும் படிக்க | Viral Video: குறுக்கே நின்ற பைக்... சிறுமிக்கு வந்த திடீர் திருட்டு ஐடியா - உறைந்துபோன உரிமையாளர்!


தலையில் சிசிடிவி கேமராவுடன் வலம் வரும் அந்த பெண்ணின் வீடியோ வைரல் ஆகி வருகின்றது. இணையவாசிகள் இந்த வீடியோவை நம்ப முடியாமல் பார்த்து வருகிறார்கள். வீடியோவில் அந்த பெண் தன் தலை மீது உள்ள கேமரா பற்றி பேட்டி அளிக்கிறார். சிசிடிவி கேமராவை தனது தந்தைதான் பொருத்தியதாகவும், தான் எங்கு செல்கிறேன், என்ன செய்கிறேன் என்பதை கவனித்து, தனது பாதுகாப்பை உறுதி செய்ய அவர் இப்படி செய்துள்ளதாகவும் பெண் கூறுகிறார். தனது பாதுகாவலராக இருக்கும் தனது தந்தைக்கு இந்த கேமரா உதவியாக இருக்கும் என அவர் மேலும் தெரிவிக்கிறார்.


தலையில் சிசிடிவி கேமராவுடன் பேட்டி அளித்த பெண்ணின் வீடியோவை இங்கே காணலாம்: