பைக்கில் ரைட் செய்வது பலருக்கும் பிடித்தமானது, ஒவ்வொருவருக்கும் விருப்பமான பைக் என்று ஒன்று இருக்கும்.  பைக் ரைட் மீது ஆண்களை விட பெண்களுக்கு அதிகளவில் மோகம் இருக்கிறது, ஆண்களுக்கு நிகராக பெண்களும் விதவிதமான பைக்குகளில் ரைட் செய்ய தொடங்கிவிட்டனர்.  சில மாதங்களுக்கு முன்னர் பைக்கில் லடாக்கிற்கு ட்ரிப் செல்ல பலர் முயற்சி செய்தது ட்ரெண்டிங்கானது.  நாளுக்கு நாள் இளைஞர்களுக்கு பைக் மீதுள்ள மோகம் அதிகரித்துக்கொண்டே செல்கின்றது.  பைக் ரைட் செய்வது எந்த அளவிற்கு உற்சாகத்தை தருகிறதோ அந்த அளவில் அதில் ஆபத்தும் நிறைந்திருக்கிறது என்பதை இளைஞர்கள் பலரும் உணராமல் சாகசம் செய்து வருகின்றனர்.  இன்றைய தலைமுறையை சேர்ந்த இளைஞர்கள் இதுபோன்று பைக்குகளில் சாகசம் செய்வதை கண்டு சில முதியவர்கள் தங்களால் இதுபோன்று ஓட்டமுடியுமா, நமக்கும் ஒரு வாய்ப்பு கிடைக்குமா என ஏங்கிக்கொண்டு இருக்கும் நிலையில் இந்த வாய்ப்பு ஒரு முதியவருக்கு கிடைத்து இருக்கிறது.  ஒரு சாகச பைக் ரைடர் ஒரு முதியவரை தனது ஹோண்டா ஆப்பிரிக்கா ட்வின் மீது அமர்ந்து போஸ் கொடுக்க அனுமதிக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி, பலரது மனதையும் கவர்ந்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | முதலையிடம் வசமாய் மாட்டிக்கொண்ட நாய்..அப்புறம் என்னாச்சி: வீடியோ வைரல் 


இந்த வீடியோவானது இன்ஸ்டாகிராமில் adventure_riders_world என்கிற பக்கத்தில் பகிரப்பட்டு இருக்கிறது.  இந்த வீடியோவில் பைக் ஓட்டும் ரைடர்கள் சிலர் ஒரு குழுவாக கிராமத்தில் இருப்பதை காண முடிகிறது, வீடியோவில் அந்த இடத்தை பார்க்கும்பொழுது அது கர்நாடகா மாநிலத்திலுள்ள ஒரு கிராமப்பகுதி போன்று தெரிகிறது.  அந்த பைக் ரைடர் குழுவினர் அனைவரும் ஹோண்டா ஆப்ரிக்கா ட்வின்ஸ் பைக்கை வைத்திருக்கின்றனர், அவர்கள் ஒரு நீண்ட தூரம் பயணம் மேற்கொள்வது இந்த வீடியோவின் மூலம் தெரிகிறது.  சாதாரண பைக்குகள் மற்றும் கார்கள் கூட செல்லமுடியாத மண் சாலை பாதைகள் வழியாக அந்த குழுவினர் தங்களது சூப்பர் பைக்கில் சவாரி செய்தனர், நீண்ட தூரம் சவாரி செய்பதவர்கள் கொஞ்சம் ஓய்வு எடுப்பதற்காக தங்களது பைக்குகளை ஒரு ஓரமாக நிறுத்தி பைக்கின் மீது சாய்ந்துகொண்டு இருக்கின்றனர்.


 



அந்த பைக் ரைடர்கள் ஓய்வு எடுத்துக்கொண்டு இருக்கும் சமயத்தில் அந்த வழியாக வந்த முதியவர் ஒருவர் அவர்களிடம் சென்று தான் இந்த பைக்கின் மீது அமர்ந்து பார்க்கலாமா என்று கேட்டிருப்பது போல தோன்றுகிறது.  அதன் பிறகு அந்த முதியவர் அந்த சூப்பர் பைக்கின் மீது அழகாக அமர்ந்திருக்கிறார், மேலும் ரைடர்கள் அந்த பைக்கை ஓட்டும்போது அவர்கள் செய்வது போல அந்த முதியவரை அதில் நிற்கச் சொல்கிறார்கள்.  பைக் ஓட்டுபவர்களில் இருவர் அவருக்கு பைக்கில் ஏற உதவுகிறார், பைக்கில் அமர்ந்த பிறகு முதியவர் சிரிப்பதை பார்க்கியில் அவர் எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறார் என்பதை நம்மால் பார்க்க முடிகிறது.  மேலும் அந்த முதியவர் மகிழ்ச்சியாக பைக்கில் அமர்ந்து போட்டோவிற்கு போஸ் கொடுக்கிறார்.


வீடியோவில் பார்க்கையில் அந்த பைக் ஹோண்டாவின் 2022 மாடல் ஆப்பிரிக்கா ட்வின் போல் தெரிகிறது.  இது அட்வென்ச்சர் ஸ்போர்ட்ஸ் மோட்டார்சைக்கிள் பிரீமியம் தயாரிப்பு என்பதால் நாடு முழுவதும் உள்ள ஹோண்டா பிக் விங் டீலர்ஷிப்கள் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. இந்த பைக் இந்திய சந்தையில் சிகேடி (Completely Knacked Down) மாடலாக அறிமுகப்படுத்தப்பட்டது மற்றும் இது டிசிடி மற்றும் மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் கிடைக்கிறது.  இந்த பைக் 1082-சிசி, லிக்விட்-கூல்டு, 4-ஸ்ட்ரோக், பேரலல் ட்வின் எஞ்சினுடன் 98 பிஎஸ் மற்றும் 103 என்எம் பீக் டார்க்கை உருவாக்குகிறது.  டூயல்-சேனல் ஏபிஎஸ், புளூடூத் இணைப்பு அம்சங்கள் போன்ற பல அம்சங்கள் கிடைக்கிறது.  இந்த பைக்கை எக்ஸ்-ஷோரூம் ரூ.16.01 லட்சம் ஆரம்ப விலையில் விற்பனை செய்ய தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | ‘ஓவரா பண்ணாத...’ நாகப்பாம்பின் வாலை இழுத்து நக்கல் செய்த குரங்கு, வேற வெலவ் வைரல் வீடியோ


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ