வைரல் வீடியோ: இணைய உலகம் பல வித அற்புதங்களை தன்னுள்ளே கொண்டுள்ள ஒரு வித்தியாசமான உலகமாகும். இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் விலங்குகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. விலங்குகளின் உலகில் நாம் நம்ப முடியாத, அருகில் சென்று பார்க்க முடியாத பல நிகழ்வுகளை நாம் இணையத்தில் காண்கிறோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

காட்டில் சிங்கங்களும் புலிகளும் மற்ற விலங்குகளை வேட்டையாடும் பல வீடியோக்களை நாம் பொதுவாக பல வீடியோக்களில் பார்த்திருப்போம். ஆனால் சிங்கத்தையே வேட்டையாடும் சில மிருகங்களும் உள்ளன. இதை நிரூபிக்கும் ஒரு வீடியோ சமீபத்தில் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த வீடியோ, காண்பவர்களுக்கு ஆச்சரியத்தையும் வியப்பையும் அளிக்கின்றது. எருமைகளின் ஒரு கூட்டம் தனியாக சிக்கிக்கொண்ட ஒரு சிங்கத்தை பாடாய் படுத்துவதை வீடியோவில் காண முடிகின்றது.


மேலும் படிக்க | துப்பாக்கியால் சுட்டதும் மல்லாக்க விழுந்த நபர்; காமெடிய நீங்களே பாருங்க; வீடியோ 


காட்டின் ஒரு பகுதியில் எருமைகள் கூட்டமாக இருப்பதை வீடியோவில் காண முடிகின்றது. அப்போது அங்கு ஒரு சிங்கக்குட்டி வருகிறது. அதன் பிறகு, எருமை கூட்டம் அந்த சிங்கக்குட்டியை காற்றில் வீசி விளையாடி, பாடாய் படுத்தி, வலிமிகுந்த மரணத்தை கொடுப்பதை வீடியோவில் காண்கிறோம். இந்த காட்சியை பார்த்தால், யாராலும் பதட்டப்படாமல் இருக்க முடியாது. 


எருமைகளிடம் சிக்கி உயிர் விட்ட சிங்கக்குட்டி 


சமூகவலைத்தளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவில் காட்டில் எருமைகள் கூட்டத்துக்கு மத்தியில் ஒரு சிங்கக்குட்டி வந்து மாட்டிக்கொள்வதை காண முடிகின்றது. சிங்கத்தின் குட்டியை பார்த்ததும் எருமைகளின் கோபம் ஏனோ அதிகமாகிறது. பின்னர், அனைத்து எருமைகளும் சேர்ந்து அதை தாக்கி காற்றில் வீச துவங்குகின்றன. தங்கள் கொம்புகளால் சிங்கக்குட்டியை தூக்கி காற்றில் வீசி அதற்கு தங்களாலான துயரத்தை அளிக்கின்றன. இப்படி ஒரு முறை, இரு முறை அல்ல, பல முறை நடக்கின்றது. அனைத்து எருமைகளும் சிங்கக் குட்டியை மாறி மாறி காற்றில் தூக்கி வீசுவதை வீடியோவில் காண முடிகின்றது. 


எருமைகளின் கொடூரமான பக்கத்தை இந்த வீடியோவில் காணலாம்:


காட்டு விலங்குகள் தொடர்பான இந்தக் வீடியோவில் நாம் காணும் காட்சியை பொதுவாக நாம் பார்த்துவிட முடியாது. சிங்கங்கள் மற்றும் எருமைகள் தொடர்பான இந்த வீடியோ earth.reel என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த வீடியோ இதுவரை ஆயிரக்கணக்கான வியூஸ்களையும் ஏகப்பட்ட லைக்குகளையும் பெற்றுள்ளது. 


இணையவாசிகள் இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். மிருகங்களுக்கு இடையில் இருக்கும் வன்மமும், கோபமும், பலமும் நம்மை ஆச்சரியப்பட வைக்கிறது. இதற்கு பல வித கமெண்டுகளும் வந்த வண்ணம் உள்ளன. 


மேலும் படிக்க | திருமண மண்டபத்தில் மணமகளை பார்த்து அலறிய மணமகன்: வீடியோ வைரல் 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ