வைரல் வீடியோ: சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகி வருகின்றன. இவற்றைக் கண்டு நெட்டிசன்கள் தங்கள் மன அழுத்தங்களை மறந்து ரசித்து சிரிக்கின்றனர். அந்தவகையில் சமீப காலங்களில் திருமண வீடியோக்கள், காதலர்களின் வீடியோக்கள், விலங்குகளின் வீடியோக்கள் இணையத்தளத்தை கலக்கி வருகின்றன. அதிலும் புதுமண தம்பதிகளின் வீடியோக்கள் எப்போதும் மிக விரைவாக வைரல் ஆகின்றன. புதுமண தம்பதிகளின் வீடியோக்களுக்கு எப்போதும் ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றது. புதுமண தம்பதிகளின் வீடியோக்களை இணையவாசிகள் மிகவும் விரும்பி பார்ப்பதுண்டு. பொதுவாக கல்யாண வீட்டில் எந்த அளவுக்கு மகிழ்ச்சியும், உற்சாகமும் இருக்கிறதோ, அதே அளவு ஒருவித பயமும், பதட்டமும் இருக்கும். அதன்படி தற்போது வெளிவந்துள்ள காணொளி இவை அனைத்தையும் விட வித்தியாசமானது. அந்த வகையில் தற்போது வைரலாகி வரும் வீடியோ கேரளாவில் உள்ள ஒரு திருமண வீட்டில் நடந்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதன்படி இந்த கல்யாண வீட்டில் இரவு உணவிற்கு உட்காரும்போது கூடுதல் அப்பளம் தருமாறு மணமகன் தரப்பினர் கேட்டுள்ளனர். ஆனால், அதற்கு ஒருவரும் சரியாக பதில் அளிக்கவில்லை. பின்னர் சிறுது நேரம் கழித்து அப்பளம் திரும்ப திரும்ப கொடுக்க முடியாது என்று கேட்டரிங் ஏஜென்சியில் இருந்து பதில் வந்தது. இதனால் வெறும் வார்த்தைகளால் சண்டை தொடங்கியது. பின்னர் அடிதடி தகராறில் முடிவடைந்தது.


மேலும் படிக்க | கிணற்றுக்குள் விழுந்த பூனையின் திக் திக் நிமிடங்கள்.. வைரலாகும் வீடியோ!



வைரலான வீடியோவில், அவர்கள் ஒருவரையொருவர் ஷூ மற்றும் செருப்பால் அடித்துக் கொள்வது போல் தெரிகிறது. அதுமட்டுமின்றி நாற்காலி, மேசைகளை எடுத்துக்கொண்டு சண்டை போடுவதையும் இந்த வீடியோவில் நீங்கள் காணலாம். இந்த சம்பவத்தில் 6 பேர் காயமடைந்தனர். ஒரு கணம் திருமண வீடு போர்க்களமாக மாறியது. 


இந்த காணொளியில் இவர்கள் சண்டையை பார்த்த நெட்டிசன்கள் ஆச்சரியமடைந்தார்கள். மேலும் இந்த வீடியோ பல்வேறு சமூக வலைதளங்களில் அதிகம் பார்க்கப்பட்டு வருகிறது. அதன்படி இந்த வீடியோ @ByRakeshSimha என்கிற டிவிட்டர்  கணக்கில் பதிவேற்றப்பட்டுள்ளது. இதுவரை இந்த வீடியோ பல மில்லியன் முறை பார்க்கப்பட்டுள்ளது. அதேபோல் வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் பல வித கமெண்டுகளை அள்ளி வீசி வருகின்றனர். 


மேலும் படிக்க | Viral Video: ‘குட்டிக்கரணம்’ போடும் புறா; இணையவாசிகளை சொக்க வைத்த வீடியோ