வைரல் வீடியோ: இன்றைய நாட்களில் சமூக ஊடகமே உடனுக்குடன் செய்திகளைக் கொடுக்கும் துரித ஊடகமாகிவிட்டது. வெறும் செய்திகளை மட்டுமல்லாமல், வித்தியாசமான அனுபவங்கள் தரும் மாபெரும் ஊடகமாக சமூக ஊடகங்கள் வளர்ந்ததற்கு காரணம் தொழில்நுட்ப வளர்ச்சி, மற்றும் கைப்பேசிகளின் பயன்பாடு.சமூக ஊடகங்களில் வெளியாகும் வீடியோக்களை பலரும் பார்த்து ரசிக்கின்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அவற்றில் சில சிந்திக்க வைக்கின்றன, சில ஆச்சரியப்பட வைக்கின்றன, சில அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, இப்படி பல கலவையான அனுபவங்களை நமக்குக் கொடுக்கும் வீடியோக்கள், அதிகமாக பார்க்கப்படும்போது, அவை வைரலாகின்றன.


குறிப்பாக விலங்குகளின் வீடியோகள் சுவாரசியமானவையாக இருக்கின்றன. அப்படிப்பட்ட ஒரு வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. சமூக ஊடகங்களில் பகிரபப்டும் அந்த வீடியோவில் சிங்கத்துடன் சண்டையிட்டு தனது குட்டியைக் காப்பாற்றும் தாய் விலங்கின் வீடியோ மனதை நெகிழ வைக்கிறது. 


வைரலாகும் பாசப் போராட்ட வீடியோ


குட்டிப் போட்ட தாயின் போராட்ட வீடியோ  ஆச்சரியத்தையும் நெகிழ்ச்சியையும் கொடுக்கிறது. ஒரு நொடி கவனம் குறைந்தாலும், பிறந்த குழந்தையை காலனாய் வந்து நிற்கும் விலங்குகள் அடித்துத் தின்று விடும் என்ற பயம் ஏற்பட்டாலும், தன்னால் முடிந்த வரை போராடிப் பார்க்கும் தாயின் அன்பு நெகிழச் செய்கிறது.



மேலும் படிக்க | Viral Video: நடுரோட்டில் இப்படியா..அடுத்து என்ன நடந்தது? அதிர்ச்சி வீடியோ


இது விலங்குகளின் உலகில் சாதாரணமான விஷயமாக இருக்கலாம். ஆனால், மனிதர்களான நமக்கு இதுபோன்ற வீடியோக்கள் மனதை வருத்தமுறச் செய்கின்றன. வல்லவன் வாழ்வான், பலவீனன் வீழ்வான் என்றாலும், பிறந்தக் குழந்தைக்கும் வாழ்வு சாசுவதமில்லை என்ற நிதர்சனம் மனதை வாட்டுகிறது.


குழந்தை பாதுகாப்பாக இருக்குமா? எத்தனை நேரம், பல சிங்கங்களை தாக்குப்பிடிக்க முடியும் என்று தெரியாவிட்டாலும், குழந்தையைக் காப்பாற்றும் ஒற்றைக் குறிக்கோளுடன் போராடுகிறது காட்டு எருமை.  


மேலும் படிக்க | Viral Video: மயிலை தாக்க முயன்ற புலி.. இறுதியில் யாரும் எதிர்பார்க்காத திருப்பம்


இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது. இதற்கு ஆயிரக்கணக்கான வியூஸ்களும் ஏகப்பட்ட லைக்குகளும் கிடைத்துள்ளன. இணையவாசிகள் பல வித கமெண்டுகளை அளித்து வருகின்றனர்.


மேலும் படிக்க | சிங்கக்கூட்டத்தில் சிக்கிய குரங்கு: மனதை பதபதைக்க வைக்கும் வைரல் வீடியோ 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ