சிங்கக்கூட்டத்தில் சிக்கிய குரங்கு: மனதை பதபதைக்க வைக்கும் வைரல் வீடியோ

Monkey vs Lion: காட்டில் குறும்பாக விளையாடிய குரங்குக்கு ஏற்பட்ட பரிதாபத்தின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Mar 2, 2023, 11:15 AM IST
  • ஆண் மற்றும் பெண் சிங்கங்கள் காட்டில் பரவலாக சுற்றித் திரிகின்றன.
  • காடே அவர்களுக்கு சொந்தம் என்பது போன்ற ஒரு தோரணை அவற்றின் நடையில் தெரிவதுண்டு.
  • அவற்றின் பலம் காரணமாக எந்த மிருகமும் அவற்றுடன் மோதுவதில்லை.
சிங்கக்கூட்டத்தில் சிக்கிய குரங்கு: மனதை பதபதைக்க வைக்கும் வைரல் வீடியோ title=

வைரல் வீடியோ: இன்றைய உலகில், சமூக ஊடகங்கள் நம் வாழ்வோடு பின்னிப்பிணைந்து உள்ளன. இணையம் ஒரு தனி உலகமாக இயங்கி வருகிறது. இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் விலங்குகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. 

ஆண் மற்றும் பெண் சிங்கங்கள் காட்டில் பரவலாக சுற்றித் திரிகின்றன. காடே அவர்களுக்கு சொந்தம் என்பது போன்ற ஒரு தோரணை அவற்றின் நடையில் தெரிவதுண்டு. அவற்றின் பலம் காரணமாக எந்த மிருகமும் அவற்றுடன் மோதுவதில்லை. 

ஆனால் மறுபுறம் குரங்குகள் மிகவும் குறும்புத்தனமானவை. அவை பாரபட்சமில்லாமல் அனைத்து மிருகங்களையும் வம்பிழுத்து குறும்பு செய்கின்றன. குரங்குகளின் பல குறும்பு வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ளன. 

சமீபத்திலும் குரங்கு செய்யும் குறும்பின் ஒரு வீடியோ இணையத்தில் பகிரப்பட்டுள்ளது. ஆனால் இந்த வீடியோ வேடிக்கையாக இல்லாமல் பரிதாபமாகத்தான் உள்ளது. சிங்கம், புலி போன்ற விலங்குகளைக் கூட கிண்டல் செய்துவிட்டு குரங்குகள் மரங்களில் இருந்து இறங்கி ஓடுவதை பலமுறை நாம் பார்த்துள்ளோம். ஆனால் எப்போதும் குரங்குகளுக்கு அதிர்ஷ்டம் கை கொடுப்பதில்லை. சில சமயம் இவை ஆபத்தில் சிக்கிக்கொள்கின்றன. அப்படி ஒரு காட்சி கொண்ட வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

மேலும் படிக்க | நூற்றுக்கணக்கான Pythonகளுக்கு இடையே சிக்கிக்கொண்ட நபர், பதற வைக்கும் வைரல் வீடியோ 

சிங்கங்களால் சூழப்பட்ட குரங்கு

இந்த வீடியோவில், குரங்கு ஒன்று ஆற்றின் கரையில் உள்ள காய்ந்த மரத்தில் ஏறுவதை காண முடிகின்றது. கீழே பல சிங்கங்கள் அதை சூழந்துகொள்கின்றன. மரத்தின் உயரம் அதிகமாக இல்லாததால், ஒரு சிங்கம் அதன் மீது ஏறத் தொடங்குகிறது, மீதமுள்ள சிங்கங்கள் கீழே நிற்கின்றன. இங்கே குரங்கு எளிதாக தோல்வியை ஒப்புக்கொள்ளவில்லை. சிங்கத்தை அடித்து காயப்படுத்த முயற்சிக்கிறது. ஆனால் சிங்கம் அதைப் பிடித்து கீழே தள்ளி விடுகிறது. குரங்கு கீழே விழுந்த உடனேயே அனைத்து சிங்கங்களும் குரங்கைத் தாக்குகின்றன.

சிங்கங்களிடம் மாட்டிக்கொண்ட குரங்கின் பரிதாப வீடியோவை இங்கே காணலாம்

 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

 

இறுதியில், குரங்கை வேட்டையாடுவதில் சிங்கங்கள் வெற்றி பெறுகின்றன. காட்டு விலங்குகள் தொடர்பான இந்த வீடியோ ppredator_wildlifevids என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவேற்றப்பட்டுள்ளது. இதற்கு இதுவரை ஆயிரக்கணக்கான வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்துள்ளன. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள். 

மேலும் படிக்க | Pakistan Cookery Show: போட்டிக்கு கடையிலிருந்து பிரியாணி வாங்கிய பெண்: கடுப்பான நடுவர்கள், வைரல் வீடியோ 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

Trending News