வைரல் வீடியோ: மனித வாழ்க்கை பல வித இறுக்கங்களையும் பிரச்சனைகளையும் கொண்டது. தினம் தினம் பல வித இன்னல்களையும் சவால்களையும் சந்திக்கும் நாம் இவற்றிலிருந்து சிறிதளவு நிவாரணம் கிடைத்தாலும் நிம்மதி அடைகிறோம். சில விஷயங்கள் அவ்வப்போது நம்மை திசை திருப்பி நமக்கு ஒரு மாறுதலை அளிக்கின்றன. அத்தகைய விஷயங்களில் சமூக ஊடகங்களுக்கு ஒரு முக்கிய பங்குண்டு. இதில் வரும் செய்திகளும் வீடியோக்களும் நம்மை நம் கவலைகளை மறந்து சிரிக்க வைக்கின்றன, சில சிந்திக்கவும் வைக்கின்றன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சமூக ஊடகங்களில் பகிரப்படும் வீடியோக்களில் திருமண வீடியோக்களுக்கென தனி மவுசு உள்ளது. இந்த வீடியோக்களின் மூலம் நாட்டின் பல்வேறு இடங்களில் நடக்கும் பல விதமான திருமண சடங்குகளையும், அவற்றில் நடக்கும் வினோதமான விஷயங்களையும் காண முடிகின்றது. நம் நாட்டில் திருமணங்கள் திருவிழாக்களை போல கொண்டாடப்படுகின்றன. திருமணம் என்றாலே மகிழ்ச்சி, கோலாகலம் தான். இது மணமக்களின் வாழ்வில் மிக முக்கியமான தருணமாக இருப்பதோடு மட்டுமல்லாமல், இரு குடும்பங்களின் சங்கமமாகவும் உள்ளது. பல உறவுகளும் நட்புகளும் சேர்ந்து மகிழ்ந்து அனுபவிக்கும் கோலாகலமான கொண்டாட்டமாக இது இருக்கின்றது.  சில சமயம் திருமண ஜோடிகள் அழகாக நடனமாடுவதையும், சில சமயம் காதல் வசனங்கள் பேசுவதையும், சில சமயம் முத்தங்களை பரிமாறிக்கொள்வதையும் நாம் பார்த்துள்ளோம். 


திருமணங்கள் மகிழ்ச்சியான நிகழ்வுகள். திருமணம் என்பது எதிர்காலத்தின் ஒரு அழகான வாக்குறுதி. வாழ்க்கையின் பொக்கிஷமான சில நினைவுகளையும் அவை நமக்கு வழங்குகின்றன. நவீன தொழில்நுட்பம் மற்றும் ஸ்மார்ட்போன்கள் எங்கும் நிறைந்திருப்பதால், இந்த தருணங்களைப் படம்பிடிப்பது முன்பை விட எளிதாகிவிட்டது. திருமண வீடியோக்கள் இணையத்தில் பெரும் புகழ் பெற்றுள்ளன. இந்த நாளில் வெளிப்படும் உணர்ச்சிகரமான, வேடிக்கையான மற்றும் எதிர்பாராத தருணங்களை இந்த வீடியோக்கள் படம் பிடித்து காட்டுகின்றன.


சமீபத்திலும் அப்படி ஒரு வீடியோ பகிரப்பட்டுள்ளது. இதை காண மிகவும் ஆச்சரியமாக உள்ளது. இதை பார்த்தால் சிலருக்கு அச்சம் கூட ஏற்படக்கூடும். மகிழ்ச்சியாய் துவங்கிய திருமண கொண்டாட்டம் கைகலப்பில் முடிந்த பரிதாபத்தை இந்த வீடியோவில் காண முடிகின்றது.


மேலும் படிக்க | Viral Video: 'ஹே எப்புறடா...' இந்த கலரில் டால்பினா... வாயை பிளந்த மீனவர்!


மணமேடையில் மோதல்


மக்கள் கவனத்தை ஈர்த்த வைரல் வீடியோவில், ஒரு திருமண மேடையில் நடக்கும் சண்டையை காண முடிகின்றது. இந்த குறிப்பிட்ட வீடியோவில், மணமகனும், மணமகளும் அமர்ந்து, திருமண கொண்டாட்டங்களை ரசித்துக்கொண்டு இருக்கிறார்கள். அப்போது விருந்தினர் ஒருவர் மணமகளை தன்னுடன் நடனம் ஆட அழைக்கிறார். மணமகளும் அவருடன் நடனம் ஆடுகிறார். இது ஒரு சாதாரணம் விஷயமாகத் தோன்றினாலும், இந்தச் செயல் தவறான புரிதலுக்கு இட்டுச் செல்கிறது. இதன் விளைவாக மேடையில் பெரிய மோதல் உருவாகிறது. 


தன் புது மனைவி மற்றொரு நபருடன் நடனம் ஆடுவதை பார்த்த மணமகனால் இதை சாதாரணமாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவர் எழுந்து மணமகளுடன் ஆட போகிறார். ஆனால் அந்த நபர் அவரை ஆட விடாமல், தானே மணமகளுடன் ஆடுகிறார். இதனால் கடுப்பான மணமகன் விருந்தினர்களுடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார். விரக்தியின் ஒரு கணத்தில், அவர் ஒரு வாளைக் காட்டி, அந்த நபருக்கு அச்சமூட்டுகிறார். இது அனைவரையும் அச்சத்தின் உச்சிக்கு கொண்டு செல்கிறது. 


மணமேடை போர்க்களம் ஆன வீடியோவை இங்கே காணலாம்:



இணையத்தில் வீடியோ வைரல் ஆனது


இந்த வீடியோ சமூக ஊடக தளமான யூட்யூபில் Yuvraj Singh என்ற பயனரால் பகிரப்பட்டுள்ளது. இதற்கு ஏகப்பட்ட வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்துள்ளன. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள். பலர் இதற்கு சிரிக்கும் எமோஜிகளை அளித்து தங்கள் வேடிக்கையான மனநிலையை வெளிப்படுத்தி வருகிறார்கள். 


மேலும் படிக்க | நடுரோட்டில் ரொமான்ஸ் செய்த பாம்புகள்.. மக்கள் செய்த செயல்: வைரல் வீடியோ


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ