எரிமலை என்றாலே ஒரு திகிலான உணர்வு ஏற்படும், இதனை பற்றி நாம் பள்ளியில் படித்திருப்போம். எரிமலை என்றதுமே நெருப்பு குழம்பாக இருக்கும் என்பது நமக்கு தெரியும்.  பள்ளி படிப்பு பயிலும் காலத்தில் சிலருக்கு இந்த எரிமலைகள் ப்ராஜெக்ட்டாக கூட கொடுக்கப்பட்டு இருக்கும், இதுவரையில்  யாரேனும் விழுந்துவிட்டால் அவரது நிலைமை என்ன ஆகும் என்று நாம் பார்த்திருக்கமாட்டோம்.  படம் அல்லது சில கார்ட்டூன்களில் வேண்டுமென்றால் நாம் பார்த்திருப்போம், ஆனால் அதை யாரும் சோதனை செய்து பார்த்திருக்கமாட்டோம், ஏன்னென்றால் எரிமலை என்றாலே நமக்குள் ஏற்படும் ஒருவித பயத்தினால் இதுபோன்ற சோதனைகளை செய்து பார்த்திருக்கமாட்டோம்.  ஒரு மனிதன் எரிமலைக்குள் விழுந்துவிட்டால் அடுத்த நொடி என்ன நடக்கும் என்பதை விவரிக்கும் வகையிலான ஒரு திகிலான காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | 'தாத்தா இது தேவையா’: பெண்ணை பார்த்து முதியவர் செய்த செயல், ஷாக் ஆன நெட்டிசன்கள்


அந்த காட்சியை பார்க்கையில் நமக்கு ஒரு திகிலான அனுபவம் ஏற்படுகிறது, இது பழைய வீடியோ தான் என்றாலும் தற்போது இணையத்தில் இது வைரலாகி வருகிறது.  ட்விட்டரில் Historic Vids என்கிற கணக்கு பக்கத்தில் பகிரப்பட்டு இருக்கும் அந்த வீடியோவில் 30 கிலோகிராம் எடைகொண்ட மனித உடல் சார்ந்த கரிம கழிவுகளை எரிமலை எரிக்கும் வீசி சோதனை நடத்தப்பட்டது.  அந்த பொருளை எரிமலைக்குழம்புக்குள் வீசியதும் நீருக்குள் மூழ்குவது போன்று மூழ்குகின்றது, பின்னர் அந்த நெருப்பு குழம்புகள் கடல் அலைகள் போல பொங்கி மேலெழும்புவதை பார்க்க முடிகிறது.  கரிம கழிவுகளை தூக்கி எறிந்ததும் எரிமலைக்குழம்பு வெடிக்கும் காட்சி நெஞ்சை பதைபதைக்க செய்யும் அளவிற்கு திகிலாக இருக்கிறது.


 



இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு இருக்கும் அந்த வீடியோவானது இதுவரை 8.7 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளை பெற்று வைரலாகி வருகிறது.  இணையவாசிகளை வெகுவாக கவர்ந்து இருக்கும் இந்த வீடியோவிற்கு லட்சக்கணக்கில் லைக்குகளும், கமெண்டுகளும் குவிந்து வருகின்றது.


மேலும் படிக்க | புதுசு கண்ணா புதுசு... ரயில் என்ஜினை திருடிச்சென்ற திருடர்கள் - திடுக்கிட்ட ரயில்வே!