'தாத்தா இது தேவையா’: பெண்ணை பார்த்து முதியவர் செய்த செயல், ஷாக் ஆன நெட்டிசன்கள்

Old Man Funny Video: சிலர் செய்யும் சில வினோதமான செயல்கள் பார்ப்பதற்கு வேடிக்கையாகவும், விசித்திரமாகவும் இருக்கின்றன. அப்படிப்பட்ட ஒரு வீடியோ தற்போது இணையத்தில் பகிரப்பட்டுள்ளது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Oct 22, 2022, 12:08 PM IST
  • இன்றைய உலகில், சமூக ஊடகங்கள் நம் வாழ்வோடு பின்னிப்பிணைந்து உள்ளன.
  • இணையம் ஒரு தனி உலகமாக இயங்கி வருகிறது.
  • இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம்.
'தாத்தா இது தேவையா’: பெண்ணை பார்த்து முதியவர் செய்த செயல், ஷாக் ஆன நெட்டிசன்கள் title=

வைரல் வீடியோ: இன்றைய உலகில், சமூக ஊடகங்கள் நம் வாழ்வோடு பின்னிப்பிணைந்து உள்ளன. இணையம் ஒரு தனி உலகமாக இயங்கி வருகிறது. இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. நாம் நம்ப முடியாத பல நிகழ்வுகளை நாம் இணையத்தில் காண்கிறோம்.

சமூக ஊடகங்களில் பகிரப்படும் பல வீடியோக்கள், நமக்கு பல சமயம் அதிர்ச்சியையும் வியப்பையும் அளிக்கின்றன. சிலர் செய்யும் சில வினோதமான செயல்கள் பார்ப்பதற்கு வேடிக்கையாகவும், விசித்திரமாகவும் இருக்கின்றன. அப்படிப்பட்ட ஒரு வீடியோ தற்போது இணையத்தில் பகிரப்பட்டுள்ளது.

இந்த வீடியோவில் காணப்படும் காட்சிகளை பார்த்தால் நம்மால் அதிர்ச்சியடையாமல் இருக்க முடியாது. இதில், ஒரு முதியவர் சாலையில் ஒரு பெண்ணை பார்த்தவுடன் அந்த இடத்திலேயே அமர்ந்து விடுவதையும் விசித்திரமான ரியாக்‌ஷன்களை அளிப்பதையும் காண முடிகின்றது. இந்த காட்சியை பார்த்தால் யாராலும் சிரிக்காமல் இருக்க முடியாது. 

மேலும் படிக்க |'ஆள விட்றா சாமி...' சேட்டை செய்யும் பேபி பென்குயின் - கண்ணு வைக்கும் நெட்டிசன்கள்!

தாத்தாவின் வித்தியாசமான பாணி

சமூகவலைத்தளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவில், ஒரு முதியவர் சாலையில் சுற்றித் திரியும் போது, ​​அவரது கண்கள் பள்ளி மாணவியின் மீது படுவதைக் காண முடிகிறது. பெண்ணைப் பார்த்ததும் அந்த முதியவர், ஒரு இளைஞனைப் போல, பெண்ணின் காதலனைப் போல நடந்துகொள்ளத் தொடங்குகிறார். அந்த பெண்ணை பார்த்து பிரமித்து விட்டதை காட்டும் விதமாக, அப்படியே சாலையில் அமர்ந்து பெண்ணை பார்க்கத் தொடங்குகிறார். அந்தப் பெண்ணுக்கு அவரது செய்கைகளைக் கண்டு சிரிப்பு வருகிறது. அவர் குலுங்கி குலுங்கி சிரிக்கிறார். அந்த பெண் மட்டும் இல்லாமல் அங்கு இருந்த அனைவரும் அந்த அமுதியவரின் நடவடிக்கைகளை பார்த்து சிரிக்கிறார்கள். 

லூட்டி தாத்தாவின் மாஸ் வீடியோவை இங்கே காணலாம்: 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by GiDDa CoMpAnY (@giedde)

தாத்தாவின் செய்கையைப் பார்த்து பள்ளி மாணவியின் அருகில் நின்றிருந்த பள்ளி மாணவனும் கலகலவென்று சிரிக்க ஆரம்பித்தான். இந்த வீடியோ இணையவாசிகளையும் வெகுவாக சிரிக்க வைத்துள்ளது. இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் giedde என்ற பக்கத்தில் பதிவேற்றப்பட்டது. இதற்கு ஏகப்பட்ட லைக்குகளும் வியூஸ்களும் கிடைத்துள்ளன. இணையவாசிகள் இதற்கு பலதரப்பட்ட கமெண்டுகளை அள்ளி வீசி வருகிறார்கள். 

‘இந்த தாத்தாவுக்கு இது தேவையா?’ என ஒரு பயனர் எழுதியுள்ளார். ‘தாத்தாவின் செயல் வேட்டிக்கையாக உள்ளது’ என மற்றொருவர் கருத்து தெரிவித்துள்ளார். 

மேலும் படிக்க | கரும்பு லாரியா? ஒரு டோக்கன் போட்டுட்டு போ..! யானையின் குறும்பு வீடியோ வைரல்! 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News