காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறிய Modilie என்னும் வார்த்தை ஆங்கில அகராதியிலேயே இல்லை என Oxford அகராதி இன்று உறுதி படுத்தியுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முன்னதாக நேற்றய தினம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் Modilie என்ற வார்த்தை குறித்த புகைப்படம் ஒன்றை பதிவிட்டார். இந்த படத்தில் இருக்கும் வார்த்தை Modi-lie(மோடியின் பொய்) என்பதை குறிக்கும் வார்த்தை எனவும், ஆங்கிலத்தில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்டு இருந்தார்.



இந்நிலையில் இன்று இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள Oxford அகராதி., தங்களது அகராதியில் Modilie என்னும் வார்த்தை இடம்பெறவில்லை., எனவே இந்த படத்தில் காட்டப்பட்டிருக்கும் வார்த்தை பொய்யான ஒன்று என குறிப்பிட்டுள்ளது.


இதுகுறித்து பாஜக மூத்த தலைவர் GVL நரசிம்ம ராவ் தெரிவிக்கையில்., ராகுல் காந்தியின் வார்த்தைகளை பெரிதாக கருதி நாம் நமது நேரத்தை வீனடிக்க வேண்டாம். இளஞர்கள் சமுதாயத்தில் ராகுல் காந்தியை ஒரு கேளி பொருளாய் பார்க்கின்றனர்., இந்நிலையில் நாம் ராகுல் காந்தியின் வார்த்தைகளுக்கு அர்த்தம் தேடி வந்தால் நமது நேரத்தை நாமே வீனடிக்கின்றோம் என நமக்கு தெரியவரும் என குறிப்பிட்டுள்ளார். மேலும் 2019-ஆம் ஆண்டு மக்களவை தேர்தலை பொருத்தவரையில் ராகுல் காந்தி மிகவும் கீழ்த்தரமான தேரதல் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றார் எனவும் அவர் விமர்சித்திருந்தார்.


முன்னதாக தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய ராகுல் காந்தி., விவாத மேடையில் கூறிய வார்த்தைகள் அடுத்த சில மணி நேரங்களில் சமூக ஊடகங்களில் மீம்ஸ்கள் மூலம் கேளியாய் விமர்சிக்கப்பட்டது. இந்த நிகழ்வினை தொடர்ந்து GVL நரசிம்ம ராவ் இவ்வாறு தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.



சமீபத்தில் மோடி குறித்து விமர்சித்த ராகுல் காந்தி உச்ச நீதிமன்றத்தில் பகிரங்க மண்ணிப்பு கேட்டார். இந்நிலையில் தற்போது ராகுல் காந்தி Modilie வார்த்தை விவகாரத்தில் சிக்கியுள்ள விவகாரம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.