பா.ரஞ்சித் - ராகுல் காந்தி சந்திப்பு: சந்திப்பின் பின்னணி என்ன?
இயக்குநர் பா.ரஞ்சித்துடனான சந்திப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்!
இயக்குநர் பா.ரஞ்சித்துடனான சந்திப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்!
கபாலி படத்தைத் தொடர்ந்து ரஜினி நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் ‘காலா’. தனுஷ் தயாரித்துள்ள இந்தத் திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படத்தில் ரஜினியுடன் ஹியூமா குரேஷி, ஈஸ்வரி ராவ், சமுத்திரக்கனி உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் உருவாகி உள்ள இந்தத் திரைப்படம் உலகம் முழுவதும் ஜூன் 7-ம் தேதி வெளியானது. தமிழகம் முழுவதும் 500-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று ஓடி கொண்டிருகிறது. காலா அனைத்து மொழிகளிலும் பிளாக் பஸ்டர் வெற்றியை பெற்றது.
இப்படத்தின் இயக்குனரை பல பிரபலங்கள் மட்டும் இன்றி பல்வேறு அரசியல் தலைவர்களும் பாராட்டுகளை தெரிவித்து வந்தனர். இதையடுத்து, நேற்று இயக்குநர் பா.ரஞ்சித் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தியை சந்தித்தார். அப்போது எடுக்கபட்ட படத்தை காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அத்தோடு மெட்ராஸ், கபாலி, காலா போன்ற பிளாக்பஸ்டர் படங்களை இயக்கிய இயக்குநர் பா.ரஞ்சித்தை நேற்று டெல்லியில்சந்தித்தேன். அவருடன் நடிகர் கலையரசனையும் சந்தித்தேன். சமுதாயம், அரசியல், திரைப்படங்கள் குறித்து பேசினோம். அவர்களுடன் உரையாடியது மகிழ்ச்சியளிக்கிறது என்று அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.