தனா இயக்கத்தில் விஜய் யேசுதாஸ் கதாநாயகனாக அறிமுகமாகும் படம் படைவீரன். இப்படத்தில் இயக்குனர் பாரதிராஜா முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் அம்ரிதா கதாநாயகியாக நடிக்கிறார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இப்படத்திற்கு ஒளிப்பதிவாளராக ராஜவேல் மோகன் ஒளிப்பதிவு செய்ய, கார்த்திக் ராஜா இசையமைக்கிறார். மேலும், அகில், கலையரசன், இயக்குநர்கள் விஜய்பாலாஜி, மனோஜ் குமார், உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். கார்த்திக் ராஜா இசையில் நடிகர் தனுஷ் ஒரு பாடலைப் பாடியுள்ளார். இந்தப் படம் பிப்ரவரி 2-ம் தேதி வெளியாகிறது. இந்நிலையில் தற்போது இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.