முன்னணி டிஜிட்டல் கட்டண தளமான Paytm, தற்போது எந்த ஒரு QR குறியீட்டையும் ஸ்கேன் செய்து பணம் செலுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டு வரவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

200-250 கோடி ரூபாய் மதிப்பிலான மெகா பிரச்சாரத்தில், இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் கட்டண தளமான Paytm தற்போது இந்த அதிரடி நடவிடக்கையினை மேற்கொண்டு உள்ளது. அந்த வகையில் Paytm இனி BHIM UPI, Google Pay ஆகியவிற்றின் QR குறியீட்டையும் ஸ்கேன் செய்து உடனடி கட்டணம் செலுத்த முயற்சிக்கிறது.


இந்த நடவடிக்கை கிராமப்புறங்களில் உள்ள சிறிய பெட்டி கடைகளுக்கும் பயனளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த முறைமை ஆனது டிஜிட்டல் கட்டண முறையில் பணத்தை பெற்று நேரடியாக தங்கள் வங்கிக் கணக்குகளில் செலுத்தும் எனவும் கூறப்படுகிறது.



இதுகுறித்து Paytm மூத்த துணைத் தலைவர் தீபக் அபோட் தெரிவிக்கையில்., "Paytm-ல், எங்கள் பயனர்களுக்கு அவர்கள் விரும்பும் கட்டண முறையைத் தேர்வுசெய்ய நெகிழ்வுத்தன்மையை வழங்குவதில் நாங்கள் பெருமையடைகிறோம். தற்போது இயங்கக்கூடிய UPI உடன், உடனடி கொடுப்பனவுகளுக்காக தங்கள் Paytm பயன்பாட்டின் மூலம் எந்த ஒரு QR குறியீட்டையும் ஸ்கேன் செய்வதற்கான நெகிழ்வுத்தன்மையையும் வாடிக்கையாளர்களுக்கு அளிக்கின்றோம்" என தெரிவித்துள்ளார்.


மேலும் அவர் தெரிவிக்கையில்., "அதிகமான பயனர்கள் தங்கள் வங்கிக் கணக்குகளை Paytm UPI உடன் இணைத்து வருகிறார்கள், மேலும் அவர்கள் அருகிலுள்ள கடைகள், உணவகங்கள், எரிபொருள் நிலையங்கள், மருந்தகங்கள், மருத்துவமனைகள் போன்றவற்றில் Paytm பயன்படுத்தி வசதியாக பணம் செலுத்துகிறார்கள். எனவே வாடிக்கையாளர்களின் தேவையை உணர்ந்து நாங்கள் தொடர்ந்து புதுமைப்படுத்துகிறோம், புதிய அம்சங்களைச் சேர்க்கின்றோன். மேலும் எங்கள் பயனர்களின் அனுபவத்தை மேம்படுத்துவோம்." என தெரிவித்துள்ளார்.