வெள்ளம் வரும்போது பல்வேறு சேதங்கள் ஏற்படுவது வழக்கம்.ஆறுகளுக்கு அருகே இருப்பவர்கள் எல்லாம் பத்திரமான இடத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு தங்கவைக்கப்படுவார்கள். அதேநேரத்தில் தங்கள் ஊருக்குள் ஓடும் ஆறு கரைபுரண்டு ஓடுவதை பார்க்க ஆர்வமாக இருப்பார்கள். கரையின் இருபுறங்களிலும் திரண்டிருந்து காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதன் கண்கொள்ளாக் காட்சியை கண்டு ரசிப்பார்கள். தங்கள் வாழ்நாளில் கிடைத்த பாக்கியமாகக்கூட கருதுவார்கள்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | டூவிலருடன் சேர்த்து போட்டப்பட்ட ரோடு; வைரலாகும் வீடியோ


அந்த நேரத்தில் ஒருசிலர் சாகச முயற்சிகளிலும் இறங்குவார்கள். ஆபத்து நிறைந்த அந்த சாகசத்தின் பின்னணி குறித்து துளியும் ஆராயாமல் விளையாட்டாக சிலர் செய்யும் செயல்கள் ஆபத்தில் முடியவும் வாய்ப்புகள் இருக்கின்றன. அப்படி, ஓர் ஊரில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடிக் கொண்டிருக்கிறது. ஆற்றில் ஓடும் வெள்ளம் பாலத்தைக் மூழ்கடித்து ஆக்ரோஷமாக ஓடிக் கொண்டிருக்கிறது. சாலையின் இருபுறங்களிலும் இருக்கும் மக்கள், வாயடைத்துப்போய் தண்ணீர் ஓடுவதை  பார்க்கின்றனர். 



ஆனால், அங்கிருப்பவர்களை எல்லாம் முட்டாள்போல் நினைத்துக் கொண்டு, சாலையின் குறுக்கே ஓடும் காட்டாற்று வெள்ளத்தில் ராஜநடை போட்டுக் கொண்டு ஒரு இளைஞர் நடந்து வருகிறார். அங்கிருப்பவர்கள் எல்லாம் ஆச்சரியத்துடனும், பயத்துடனும் அந்த இளைஞரை பார்க்கின்றனர். ஆனால், அந்த இளைஞர் ஏதோ சாகசம் செய்ததுபோல் ஜாலியாக சாலையில் நடந்து வருகிறார். அந்தப் பக்கம் இருந்து இந்தப் பக்கம் வந்ததும், வேடிக்கைப் பார்த்தவர்களில் இருவர், அந்த இளைஞருக்கு பளார் பளார் என அறைவிட்டு சிறப்பாக கவனித்தனர். இதனை அந்த இளைஞர் துளியும் எதிர்பார்க்கவில்லை. அந்த வீடியோ, பார்ப்பவர்கள் அனைவரையும் வயிறுகுலுங்க சிரிக்க வைக்கிறது. இணையத்தில் இதுவரை ஆயிரக்கணக்கானோர் வீடியோவை பார்த்து ரசித்துள்ளனர். 


மேலும் படிக்க | தாயை இழந்த மாணவனுக்கு தோழர்களின் ஆறுதல்: இணையத்தை அழ வைத்த வைரல் வீடியோ


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR