Crocodile Viral Video: மும்பை: மகாராஷ்டிராவின் சாங்லி மாவட்டத்தின் (Sangli District) தெருக்களில் முதலை செல்லும் வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. தெருக்களில் முதலை ஊர்ந்து செல்வதை, அங்குள்ள சில உள்ளூர்வாசிகளால் பார்த்துள்ளனர். இந்த வீடியோவை செய்தி நிறுவனமான ஏ.என்.ஐ. (ANI) வெளியிட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் அதிக மழை பெய்ததால் கிருஷ்ணா ஆற்றில் நீரின் அளவு உயர்ந்ததை அடுத்து, தண்ணீரிலிருந்த முதலை ஊருக்குள் புகுந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மழை, நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தால் மகாராஷ்டிரா மாநிலம் தத்தளிக்கும் நேரத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. தானே, ராய்காட், ரத்னகிரி, சதாரா, சாங்லி மற்றும் கோலாப்பூர் போன்ற மாவட்டங்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. மகாராஷ்டிராவில் தொடர்ந்து பெய்து வரும் மழைக் காரணமாக ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவு மூலம் இறந்தவர்களின் எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை வரை 113 ஐ எட்டியுள்ளது. அதே நேரத்தில் பருவமழை சீற்றத்தால் 100 பேர் காணாமல் போயுள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது. இந்த சம்பவங்களில் இதுவரை 50 பேர் காயமடைந்துள்ளதாக அரசாங்கம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.


 



ALSO READ | Donkey Sawari: மழை வேண்டி கழுதை மீது உட்கார்ந்து ஊரைச்சுற்றி வந்த நாட்டாமை


இதற்கிடையில், கோலாப்பூர் மாவட்டத்தை சேர்ந்த 40,882 பேர் உட்பட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து மாநிலம் முழுவதும் இதுவரை 89,333 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். 


கோலாப்பூர், சாங்லி, சதாரா மற்றும் புனே ஆகிய இடங்களில் மொத்தம் 875 கிராமங்கள் மழையால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில் 1,35,313 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். சிப்லூனில் உள்ள வாஷிஷ்டி ஆற்றின் பாலம் முன்பு பலத்த மழையைத் தொடர்ந்து சேதமடைந்தது.


ALSO READ | Viral Video: தாலி கட்டுவதற்கு முன்னால் மணமகனுக்கு நடந்த விபரீதம்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR