Donkey Sawari: மழை வேண்டி கழுதை மீது உட்கார்ந்து ஊரைச்சுற்றி வந்த நாட்டாமை

Viral News In Tamil: மத்தியப் பிரதேச மாநிலத்தில் பல பகுதிகளில் மழை பெய்யவில்லை என்ற கவலையில் இந்திரன் தெய்வத்தை மகிழ்ச்சியடைய செய்தால் நல்ல மழை பெய்யும் என்று கிராமத்தின் ஊர் தலைவர் கழுதை மீது உட்கார்ந்து சவாரி செய்துள்ளார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jul 23, 2021, 05:18 PM IST
  • இந்திரன் தெய்வத்தை மகிழ்ச்சியடைய செய்தால் நல்ல மழை பெய்யும்.
  • தங்கள் பகுதியில் மழை பெய்ய வேண்டும் என மூடநம்பிக்கைகளில் ஈடுபடுவது வழக்கம்.
  • கிராம மக்கள் ஒன்றாகக் கூடி நல்ல மழை பெய்ய பிரார்த்தனை செய்தனர்.
Donkey Sawari: மழை வேண்டி கழுதை மீது உட்கார்ந்து ஊரைச்சுற்றி வந்த நாட்டாமை title=

Viral News In Tamil: நாட்டில் பருவமழை காலம் நிலவி வருவதால், சில மாநிலங்கைல் கனமழை பெய்து வருகிறது. அதேநேரத்தில் பல மாநிலங்களில் பருவமழை இன்னும் பெய்யவில்லை. ஒருபக்கம் கடும் வெயில், மறுபக்கம் போதுமான மழை பெய்யாதது குறித்து கவலையில் உள்ளனர்.

சிலர் தங்கள் பகுதியில் மழை பெய்ய வேண்டும் என்பதற்காக சில மூடநம்பிக்கைகளில் ஈடுபடுவது வழக்கம். நிறைய படங்களில் பார்த்திருப்பீர்கள், நமது கிராமத்திற்கு ஏதோ சாபம் இருக்கிறது? தீட்டு இருக்கிறது? என்று சில சடங்குகளை செய்வார்கள். அதாவது இரவில் ஊரை சுற்றி வருவது, கடவுள்ளு விசேச பூஜை செய்வது, விலங்குக்கும் மனிதனுக்கும் திருமணம் செய்வது, மரத்துக்கு தாலி கட்டுவது என இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். இதேபோன்ற ஒரு சம்பவம் மத்தியப் பிரதேச மாநிலத்தில் நடந்துள்ளது. 

மத்தியப் பிரதேச மாநிலத்தில் பல பகுதிகளில் மழை பெய்யவில்லை என்ற கவலையில் பல்வேறு தந்திரங்களைச் செய்து வருகின்றனர். அங்குள்ள விடிஷா மாவட்டத்தில், இந்திரன் தெய்வத்தை மகிழ்ச்சியடைய செய்தால் நல்ல மழை பெய்யும் என்று கிராமத்தின் ஊர் தலைவர் கழுதை மீது உட்கார்ந்து சவாரி செய்துள்ளார்.

இந்த தந்திரம் விடிஷா மாவட்டத்தின் ரங்காய் கிராமத்தில் நடந்துள்ளது. அதில் சர்பஞ்ச் (ஊர் தலைவர்) சுஷில் வர்மா ஒரு தலைப்பாகையை கட்டி கழுதை மீது சவாரி செய்து கிராமத்தை சுற்றி வந்தார். இந்த நிகழ்ச்சியில் கிராம மக்கள், பெண்கள், குழந்தைகள் உட்பட பலர் பங்கேற்றனர். 

ALSO READ | Viral Video: தாலி கட்டுவதற்கு முன்னால் மணமகனுக்கு நடந்த விபரீதம்

கழுதை மீது சவாரி செய்த ஊர் தலைவர் சுஷில் வர்மா கூறுகையில், "கிராமத் தலைவன் கழுதையை சவாரி செய்தால், இந்திரன் கடவுள் மகிழ்ச்சி அடைந்து, மழை பெய்யும் என்று கிராமப்புறங்களில் நம்பப்படுகிறது. இந்த நம்பிக்கையின் காரணமாக, ஒரு கழுதை மீது சவாரி செய்தேன். ஏனென்றால் ஊருக்காக இருக்கும் பொதுபிரதிநிதி என்பவர், எந்த மத மக்களாக இருந்தாலும், அவர்களின் மதம் மற்றும் நம்பிக்கையின் அடிப்படையில் அவர்களின் மகிழ்ச்சியிலும் துக்கத்திலும் ஒரு பகுதியாக இருக்க வேண்டும். அதன் காரணமாக இந்து மதத்தைப் பின்பற்றி, கழுதை சவாரி செய்து கடவுளிடம் பிரார்த்தனை செய்துள்ளேன் என்றார்.

ஊர் தலைவர் கழுதை மீது சவாரி செய்து கொண்டிருந்த போது, மக்கள் மகிழ்ச்சியுடன் நடனமாடி பாட்டு பாடிக்கொண்டிருந்தார்கள். பெண்கள் பூக்கள் மற்றும் மாலைகளை அணிந்து அவரை வரவேற்றனர். இந்த பயணம் படேல் பாபா தேவஸ்தானில் இருந்து தொடங்கி விநாகர் கோவிலை அடைந்தது. அங்கு கிராம மக்கள் ஒன்றாகக் கூடி நல்ல மழை பெய்ய பிரார்த்தனை செய்தனர்.

இந்த நிகழ்வில் அப்பகுதியின் முன்னாள் நகராட்சித் தலைவர் முகேஷ் டாண்டனும் கலந்து கொண்டார், "இந்த முறை மாவட்டம் முழுவதும் வறட்சி நிலவி வருகிறது. ஏற்கனவே விவசாயி தங்கள் நிலங்களில் பயிர்களை விதைத்துள்ளார்கள். ஆனால் மழை இல்லாததால், பயிர் சேதமடைய வாய்ப்பு உள்ளது. பழைய நம்பிக்கை மற்றும் தந்திரங்களால் மழை பெய்தால், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பயனடைவார்கள் என்றார்.

ALSO READ | viral video: மணக்கோலத்தில் நடனமாடி அனைவரையும் அசத்தும் கேரள மணப்பெண்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News