ஐயப்பன் கோவிலில் பெண்கள் அனுமதிக்கப்பட்டால் சிவசேனா கட்சியின் பெண்கள் குழுவாக பம்பை ஆற்றில் குதித்து தற்கொலை செய்துக்கொள்வோம் என தெரிவித்துள்ளார். இந்த போராட்டத்தினை வேடிக்கையான விமர்சனங்கள் மூலம் கேரள மக்கள் வரவேற்றுள்ளனர்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கேரள மாநிலத்தின் சபரிமலை ஐயப்பன் கோயிலில் 10 வயதுக்கு குறைவான பெண் குழந்தைகளும் 50 வயதைத் தாண்டிய பெண்களும் மட்டும் நுழைய அனுமதி இருந்தது. இந்த நடைமுறையினை எதிர்த்து இந்திய இளம் வழக்கறிஞர்கள் அமைப்பு உள்ளிட்டோர் பலர் வழக்கு தொடர்ந்தனர். 


இந்த வழக்கில் தீபக் மிஸ்ரா, ஆர்.எப் நாரிமன், ஏஎம். கான்வில்கர், டி.ஒய்.சந்திரசூட், இந்து மல்ஹோத்ரா ஆகியோர் கொண்ட அமர்வு சபரிமலை கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்ற வரலாற்று தீரப்பினை வழங்கியது.


உச்சநீமன்றத்தின் இந்தத் தீர்ப்பை எதிர்த்து கேரளா மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் என பலரும் இந்த போராட்டத்தில் குதித்துள்ளனர்.



இந்நிலையில் இந்த போராட்டம் தற்போது தமிழகத்தை வரை எட்டியுள்ளது. தமிழகத்தில் உள்ள ஐயப்பன் பக்தர்கள், உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக சென்னையில் ஒன்றிணைந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.


முன்னதாக கடந்த புதன் அன்று மலையாள திரைப்பட நடிகர் கொல்லம் துளசி, சபரிமலை ஐயப்பன் கோவிலினுள் அனுமதிக்கப்படும் பெண்கள் இரண்டு துண்டாக வெட்டி எறியப்படுவர் என தெரிவித்தார். இந்நிலையில் தற்போது கேரள மாநில சிவசேனா உறுப்பினர் பெரங்கிமலா அஜ்ஜி, ஐயப்பன் கோவிலில் பெண்கள் அனுமதிக்கப்பட்டால் தங்கள் கட்சியின் பெண்கள் குழுவாக பம்பை ஆற்றில் குதித்து தற்கொலை செய்துக்கொள்வோம் என தெரிவித்துள்ளார். இந்த கருத்திற்கு சமூக ஆர்வலர்கள் சிலர் வேடிக்கையான விமர்சனங்கள் மூலம் பதிலடி கொடுத்துள்ளனர்.