உத்தரபிரதேச மாநிலம் மொராதாபாத்தில் இருந்து ஒரு விசித்திரமான சம்பவம்  நேரிட்டுள்ளது. பிணவறையில் ஒருவரின் பிரேதப் பரிசோதனை நடைபெறவிருந்தது. ஏழு மணி நேரம் குளிர்சாதன பெட்டியில் வைக்கப்பட்டிருந்த உடலில், பிரேத பரிசோதனைக்கு சற்று முன்பு அசைவு ஏற்படத் தொடங்கியது. இதனால் பிரேத பரிசோதனை செய்யும் மருத்துவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். இதனால் குடும்பத்தினரும், மருத்துவர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.  ஐஸ் பெட்டியை திறந்த பின் அந்த நபர் மீண்டும் உயிருடன் இருப்பது தெரியவந்தது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த அதிர்ச்சி சம்பவம் உத்தரபிரதேச (Uttar Pradesh) மாநிலம் மொராதாபாத்தில் நடந்துள்ளது. இங்கு வசிக்கும் எலக்ட்ரீசியன் ஸ்ரீகேஷ்குமார் மீது வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மோதியது. விபத்துக்குப் பிறகு, அவர் வியாழக்கிழமை இரவு மாவட்ட மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார், அங்கு அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து, மருத்துவமனை ஊழியர்கள் மறுநாள் உடலை ஃப்ரீசரில் வைத்தனர்.


ALSO READ | கலிபோர்னியா சாலையில் திடீரென பெய்த ‘டாலர்’ மழை!


சுமார் ஏழு மணி நேரம் உடல் குளிர்சாதன பெட்டியில் வைக்கப்பட்டது. உடல் அடையாளம் காணப்பட்ட பிறகு, குடும்ப உறுப்பினர்கள்  ஆவணத்தில் கையொப்பம் இடுவதற்காக பிரேத பரிசோதனை செய்யும் இடத்திற்கு வரவழைக்கப்பட்டனர். இறந்தவரின் மைத்துனி மதுபாலா ஐஸ் பெட்டியில்  வைக்கப்பட்டிருந்த உடல் கொஞ்சம் கொஞ்சமாக அசைவதை கவனித்தார். இவர்கள் உடனடியாக வீடியோ எடுக்க ஆரம்பித்தனர். வைரலான ஒரு வீடியோவில் மதுபாலா, 'அவர் சாகவில்லை. இது எப்படி நடந்தது? பாருங்கள், அவர் ஏதோ சொல்ல விரும்புகிறார், அவர் சுவாசிக்கிறார். எனக் கூறுவதைக் கேட்கலாம்.


மொராதாபாத் தலைமை மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் ஷிவ் சிங் கூறுகையில், “அவசர மருத்துவ அதிகாரி நோயாளியின் இதயம் துடிக்காத நிலையில் அதிகாலை 3 மணிக்கு நோயாளியை பார்த்தார். அந்த நபரை பலமுறை பரிசோதித்தார். அதன் பிறகு அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது, ஆனால் காலையில் போலீஸ் குழு மற்றும் அவரது குடும்பத்தினர் அவரை உயிருடன் கண்டனர். விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அவரது உயிரைக் காப்பாற்றுவதே இப்போது எங்களின் முன்னுரிமை” என்றார். அரிய நிகழ்வுகளில் இதுவும் ஒன்று.. இதை அலட்சியம் என்று சொல்ல முடியாது என்று சிங் கூறினார்.


"ஸ்ரீகேஷ் என்ற அந்த நபரை ஃப்ரீசரில் வைத்து, அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் அலட்சியமாக நடந்து கொண்ட டாக்டர்கள் மீது அலட்சியப் புகார் கொடுப்போம்" என்று குடும்பத்தினர் தெரிவித்தனர். அதே நேரத்தில், ஸ்ரீகேஷ் குமார் இப்போது மீரட்டில் உள்ள ஒரு சுகாதார மையத்தில் சிகிச்சை பெற்று வருகிறார்.  அங்கு அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.


ALSO READ | Viral Photo: இணையவாசிகளை உறைய வைத்த 3 கருநாகங்களின் வைரல் படங்கள்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR