சமூக ஊடகங்களில் வைரலாகும் சோனம் கபூர் - கரீனா கபூர் இணைந்த புகைப்படம்
சோனம் கபூர் தனது இன்ஸ்டாகிராமில் கரீனா கபூருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார்.
புதுடெல்லி: பாலிவுட் நடிகை கரீனா கபூர் கான் தனது பிறந்த நாளை செப்டம்பர் 21 அன்று கொண்டாடினார். அவரின் பிறந்த நாளையொட்டி பாலிவுட் நட்சத்திரங்கள் அவரை வாழ்த்தினர். ஆனால் சோனம் கபூர் சற்று தாமதமாக பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தார். அதாவது செப்டம்பர் 22 ஆம் தேதி சோனம் கபூர் தனது இன்ஸ்டாகிராமில் கரீனா கபூருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படம் சமூக ஊடகங்களில் மிகவும் வைரலானது. இந்த படத்தில் சோனம் மற்றும் கரீனா இருவரும் நீச்சல் உடையில் ஒன்றாகக் காணப்படுகிறார்கள். இந்த பிறந்த நாள் (செப்டம்பர் 21) அன்று, கரீனாவுக்கு 39 வயதாகியது.
அதே நேரத்தில், கரீனா தற்போதைய நாட்களில் டிவி நிகழ்ச்சி முதல் திரைப்படங்கள் வரை அனைத்து விதமான படப்பிடிப்பில் இருக்கிறார். அதேபோல அவர் இந்தி சேனலான ZEE TV இன் ரியாலிட்டி டான்ஸ் ஷோ "டான்ஸ் இந்தியா டான்ஸ்" இல் நடுவராக கலந்துக்கொண்டு வருகிறார். இது தவிர, அக்ஷய் குமார், தில்ஜித் டோசன்ஜ் மற்றும் கியாரா அத்வானி ஆகியோருடன் "குட் நியூஸ்" படத்திலும் அவர் நடித்து வருகிறார். மறுபுறம், கரண் ஜோஹரின் மல்டிஸ்டார் படமான "தக்த்" படத்திலும் அவர் நடக்கிறார். அதே நேரத்தில், இர்பான் கானுடன் 'ஆங்கில மீடியம்' படத்திலும் காணப்படுவார்.
அதே நேரத்தில், சோனம் கபூரின் படம் "தி சோயா பேக்டர்" (The Zoya Factor) கடந்த வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியானது. ஆனால் எதிர்பார்த்தப்படி படம் பாக்ஸ் ஆபிஸில் எதுவும் செய்ய முடியவில்லை. இந்த படத்தின் கதை "எழுத்தாளர் அனுஜா சவுகானின் புனைகதை"யை அடிப்படையாகக் கொண்டது. சோனம் கபூர் தவிர, துல்கர் சல்மான், அங்கத் பேடி மற்றும் சஞ்சய் கபூர் ஆகியோரும் நடித்துள்ளனர்.