தெலுங்கானாவின் ஒரு சோதனைச் சாவடியில் கையில் லட்தி ஏந்தி வாகன ஓட்டிகளை சோதனை செய்யும் RSS தொண்டர்களின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

RSS தொழிலாளர்கள் காவல்துறையினருடன் நின்றுகொண்டு, நெடுஞ்சாலையில் வாகனங்களை நிறுத்தி, பயணிகளின் ஆவணங்களை சரிபார்த்து வருவதை புகைப்படங்கள் காட்டுகின்றன. இந்த சம்பவம் வியாழக்கிழமை தெலுங்கானாவின், குடூர் சோதனைச் சாவடியில் நடந்ததாகக் கூறப்படுகிறது.


"தெலுங்கானாவில் உள்ள யாதத்ரி புவனகிரி மாவட்ட சோதனைச் சாவடியில் தினமும் 12 மணி நேரம் காவல் துறைக்கு RSS தன்னார்வலர்கள் உதவுகிறார்கள்" என்று ஏப்ரல் 9-ம் தேதியிட்ட ஒரு ட்வீட் இந்த புகைப்படங்களை முதன் முதலில் இணையத்தில் வெளியிட்டது. இந்த புகைப்படங்கள் தற்போது இணையவாசிகள் மத்தியில் பெரும் சீற்றத்தினை ஏற்படுத்தியுள்ளது.



மேலும், சமூக ஊடகங்களில் பலர் காவல்துறையை குறிச்சொல் செய்து குடிமக்களின் ஆவணங்களை சரிபார்க்க RSS-க்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதா என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.



இருப்பினும், பின்னர் சனிக்கிழமையன்று, சோதனைச் சாவடிகளை நிர்வகிக்க RSS-க்கு அனுமதி அளிக்கவில்லை என்று காவல்துறை தெளிவுபடுத்தியது. இதுகுறித்து காவல்துறை தரப்பில் தெரிவிக்கையில்., RSS தொழிலாளர்கள் வியாழக்கிழமை மட்டுமே சோதனை பணியில் ஈடுப்பட்டதாகவும், பின்னர் காவல்துறையினர் வேண்டுகோளுக்குப் பின்னர் வெள்ளிக்கிழமை முதல் திரும்பவில்லை என்றும் தெரிவித்துள்ளது.



முன்னதாக, தெலுங்கானா அரசு சனிக்கிழமையன்று மாநிலத்தில் முழு அடைப்பினை ஏப்ரல் 30 வரை நீட்டிக்க முடிவு செய்தது. முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் செய்தியாளர்களிடம் கூறுகையில், கொரோனா பரவுதலை கட்டுப்படுத்த ஒரே வழி இது என்று உணர்ந்ததால் முழு அடைப்பை நீட்டிக்க மாநில அமைச்சரவை முடிவு செய்துள்ளது. ஏப்ரல் 30-க்குப் பிறகு, பூட்டுதலை கட்டங்களாக நீக்குவது குறித்து அரசாங்கம் பரிசீலிக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.