புகைப்படப் புதிர்: இந்த படத்தில் ஒளிந்திருக்கும் பாம்பை கண்டுபிடியுங்கள்', 'இந்த புகைப்படத்தில் மறைந்திருக்கும் விலங்குகளை கண்டுபிடியுங்கள்', 'இந்த புகைப்படத்தில் எத்தனை 8 எண் இருக்கிறது' என்பது போன்ற புதிர்கள் பல சமூகவலைதளங்களில் அவ்வப்போது பகிரப்படுகின்றன. நமது அறிவுத்திறனையும், கண் பார்வைத் திறனையும் சோதிக்கக் கூடிய இந்த வகையான புதிர்கள், இணையத்தில் மிக அதிக அளவில் பகிரப்படுகின்றன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இது உங்கள் ஆளுமையின் பல்வேறு அம்சங்களை வெளிப்படுத்தும் வகையில் உள்ளது. மனதைக் கவரும் மற்றும் சுவாரஸ்யமான  புதிர்களை வெற்றிகரமாக தீர்த்து விட்டால் கிடைக்கும் மன மகிழ்ச்சியும், திருப்தியும் அலாதி தான். புகைப்பட புதிரை எந்த அளவிற்கு வேகமாக சரியாக தீர்க்கிறீர்கள் என்பதன் மூலம் கண் பார்வை, கவனிக்கும் திறன் ஆகியவற்றை சோதித்தும் கொள்ளலாம். 


அந்த வகையில் ஒரு புகைப்படப் புதிர் தற்போது மிகவும் வைரலாகி வருகிறது. இந்த புகைப்பட புதிர் மூளை கசக்குவதாகவும் உள்ளது. கொடுக்கப்பட்டுள்ள படத்தில் 8 விலங்குகளை மறைந்துள்ளன. 


மேலும் படிக்க | Picture Puzzle: படத்தில் ஒளிந்திருக்கும் சிறுத்தையை கண்டுபிடிக்க முடிகிறதா


முதல் பார்வையில், படத்தில் உள்ளது மரங்களின் கருப்பு மற்றும் வெள்ளை ஓவியம் போல் தெரிகிறது ஆனால் நீங்கள் உற்று நோக்கினால், மரங்களின் தண்டு மற்றும் கிளைகளுக்கு இடையில் விலங்குகள் மறைந்திருப்பதைக் காணலாம்.


படத்தை இங்கே பார்க்கவும்:




எந்த விலங்கின் ஓவியம் அல்லது அவுட்லைனை உங்களால் கண்டுபிடிக்க முடியுமா? நீங்கள் படத்தை உன்னிப்பாக பார்த்தால், அவற்றின் கிளைகளுடன் கூடிய மரங்களில் ஒளிந்திருக்கும் விலங்குகளை கண்டுபிடிக்கலாம். படத்தில் இடது பக்கத்தில் மூன்று விலங்குகள் இருக்கும் நிலையில், ​​​​இரண்டு நடுவில் உள்ளன, மூன்று வலது பக்கத்தில் உள்ளன.


விலங்குகளைக் கண்டுபிடிப்பதில் உங்களுக்கு உதவி தேவைப்பட்டால், புதிருக்கான பதிலை கீழே காணலாம்:



உங்களால் எல்லாவற்றையும் கண்டு பிடிக்க முடிந்ததா... சுவாரஸ்யமாக இருந்தது இல்லையா.... 


மேலும் படிக்க | பறவை கூட்டை தாக்கிய பாம்பு; சும்மா இருந்தா பறவை!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR