வைரல்: மூளைக்கு அதிகம் வேலை கொடுக்கும் இந்த படத்தை மீண்டும் மீண்டும் பார்த்தாலும் மறைந்திருக்கும் சிறுத்தையை கண்டு பிடிக்க முடியாமல் பலர் திணறி வருகின்றனர். சிறுத்தையை கண்டுபிடிக்க முடியாமல் பெரும்பாலானோர் தோல்வி அடைந்துள்ளனர். நீங்களும் முயற்சி செய்து பாருங்கள்.
சமூக வலைதளங்களில் ஒவ்வொன்றாகப் பகிரப்படும் மர்மப் படங்கள், மூளையை கசக்க வைக்கின்றன. இந்தப் படங்களின் புதிர்களில் மறைந்திருக்கும் ரகசியங்களைக் கண்டுபிடிப்பது எளிதான காரியம் அல்ல. கூர்மையான மனமும் கண்களும் உள்ளவர்களும் கூட சில சமயம் திணருகிறார்கள். எனினும், படத்தில் ஒளிந்திருக்கும் மர்மங்களை நிமிடங்களில் தீர்த்து வைக்கும் சிலரும் உள்ளனர்.
இப்போது இங்கே உள்ள படப் புதிர் உங்கள் மனதையும் உங்கள் கண்களையும் சோதிக்கும். காட்டில் எடுக்கப்ப்பட்ட இந்த படத்தில், ஒளிந்து கொண்டிருக்கும் சிறுத்தையை உங்களால் கண்டுபிடிக்க முடிகிறதா. ஆனால், அந்த சிறுத்தையை பெரும்பாலானோரால் கண்டுபிடிக்க முடியவில்லை.
மேலும் படிக்க | மானை இறுக்கும் மலைப்பாம்பு; சிக்கித் தவிக்கும் மான்... ஆனால்... நடந்தது என்ன..!!
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த புகைப்படத்தில் இரண்டு மூன்று பெரிய மரங்கள் தெரியும். சுற்றிலும் சிறிய மரங்களும் புதர்களும் காணப்படுகின்றன. ஆனால் இந்த படத்தில் ஒரு ஆபத்தான சிறுத்தைப்புலியும் மறைந்துள்ளது. அதன் இயல்புக்கு ஏற்ப இரை தேடி வருகிறது.
இந்த புகைப்படத்தை மக்கள் பலமுறை பார்த்தும் சிறுத்தையை கண்டுபிடிக்க முடியவில்லை. இறுதியில் அனைவரும் தோல்வியை ஒப்புக் கொள்கிறார்கள். ஏனெனில் பல லட்சம் முயற்சி செய்தும் சிறுத்தை கிடைக்கவில்லை.
புகைப்படத்தை இங்கே பார்க்கவும்:
பட புதிர்
வாருங்கள், சற்றும் தாமதிக்காமல், படத்தில் இருக்கும் ஆபத்தான சிறுத்தைப்புலி எங்கே ஒளிந்திருக்கிறது என்பதை கண்டுபிடிக்கலாம். முதலில், படத்தில் ஒரு தடித்த மற்றும் பெரிய மரத்தைப் பார்ப்பீர்கள். வேரை நோக்கி அந்த மரத்தின் வலது பக்கம் பாருங்கள். சிறுத்தை இரை தேடி அங்கு மறைந்துள்ளது. நீங்கள் இன்னும் அதைப் பார்க்கவில்லை என்றால், நாங்கள் அதை வட்டத்தின் உதவியுடன் காண்பிக்கிறோம். நீங்கள் சிறுத்தையைப் பார்த்தீர்களா அல்லது கண்டுபிடித்தீர்களா?
மேலும் படிக்க | Viral Video: ‘முட்டை இட’ கடற்கரைக்கு படையெடுக்கும் லட்சக்கணக்கான கடல் ஆமைகள்..!!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR