2017-ஆம் ஆண்டிற்கான உலக அழகியாக தேர்வு செய்யப்பட்டவர் இந்திய அழகி மானுஷி சில்லர். இவர் தற்போது லண்டனில் தனது விடுமுறையினை கொண்டாடி வருகின்றார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தனது விடுமுறை கெண்டாட்டத்தின் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வரும் இவர், தனது புகைப்படங்கள் மூலம் ரசிகர்கள் பலரினை பெற்று வருகின்றார். அந்த வகையில் தற்போது வெண்மை நிற ஆடையில் எடுத்துள்ள அழகிய புகைப்படங்களை ரசிகர்களுக்கா பகிர்ந்துள்ளார்.








பொதுவாக உலக அழகி பட்டம் வென்றவர்கள் விரைவில் வெள்ளித் திரையில் வந்துவிடுவதுண்டு, ஆனால் மானுஷி தனக்கு சினிமாவில் நடிக்கும் என்னம் இல்லை எனவும், ஒருவேலை அமிர்கானுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் நடிக்க தயங்கமாட்டேன் எனவும் குறிப்பிட்டு இருந்தார்.


தான் தேர்ந்தெடுக்கும் ஒவ்வொரு படத்திலும் உணர்வு பூர்வமாக நடிக்கும் அமிர்கானுடன் நடிப்பதில் தான் தனக்கு ஆர்வம் அதிகம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 


மருத்துவம் பயின்று வரும் இவர் பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் கடைப்பிடிக்க வேண்டிய சுகாதாரம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த விருப்பம் என தெரிவித்துள்ளார். இந்தியாவில் இருக்கும் பெண்கள் அனைவரும் பொதுவானவர்கள், ஆனால் நம் நாட்டில் பெண்களுக்கு என குறிப்பிட்ட வரம்புகளை நிர்ணயித்து இருக்கின்றனர். இதனை தகர்த்து எறிய வேண்டும் எனவும் அவர் பிரச்சாரம் மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்ககது!