மனித முகத்துடன் பிறந்த பன்றிக்குட்டி; இணையத்தில் வைரலாகும் Video!
சாதாரண பன்றிகளின் குழுவில் மத்தியில் மனித முகத்துடன் ஒரு அதிசய பன்றிக்குட்டி பிறந்ததாகக் கூறப்படுகிறது!
சாதாரண பன்றிகளின் குழுவில் மத்தியில் மனித முகத்துடன் ஒரு அதிசய பன்றிக்குட்டி பிறந்ததாகக் கூறப்படுகிறது!
வெனிசுலாவை சேர்ந்த விவசாயி ஒருவரின் பண்ணையில் பிறந்துள்ள இந்த பன்றிக்குட்டி மற்ற பிறப்புகளைப் போலல்லாமல், வெளிப்படையான குறைபாடுகளுடன் பிறந்துள்ளது. ஆனால் வேடிக்கையாக இந்த பன்றிக்குட்டியின் குறைபாடு மற்றவரைகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. ஆம், மனித உருவத்தை கொண்டு பிறந்துள்ள இந்த பன்றிக்குட்டி தற்போது இணையவாசிகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
வெனிசுலாவின் லாரா மாநிலத்தில் உள்ள கியூபிராடா அரிபாவின் மாவட்டத்தில் பிறந்துள்ள இந்த பன்றிக்குட்டி மனிதனைப் போன்ற ஒரு வினோதமான முகம், மாபெரும் கண்கள் மற்றும் கூந்தலைக் கொண்ட தவறான பன்றிக்குட்டியாய் பிறந்துள்ளது. இந்த பன்றிக்குட்டி பிறந்தவுடன் அதிர்ச்சியில் ஆழ்ந்த இந்த விவசாதி தனது விகாரமான பன்றிக்குட்டியின் வீடியோவினை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.
இந்த வீடியோவில் வெனிசுலா விவசாயி விகாரிக்கப்பட்ட பன்றிக்குட்டியை கேமராவில் தூக்குவதற்கு முன்பு தனது கைகளில் வைத்திருப்பதைப் போல் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. முன்னோடியில்லாத வகையில் சிதைக்கப்பட்ட விலங்கை மூடிமறைக்கிறார்.
"இது மூன்று மணி நேரத்திற்கு முன் பிறந்தது" என்று ஒரு பெண் குரல் பின்னணியில் ஒலிக்கிறது. மேலும் இந்த குரல் "இது முடியையும் கொண்டுள்ளது!" என கூறுகிறது.
உள்ளூர் ஊடக தகவல்கள் படி, இந்த பன்றிக்குட்டியின் குறைபாடுக்கு காரணங்கள் தெளிவாக கூறப்படவில்லை. இருப்பினும் மற்ற தென் அமெரிக்க நாடுகளில் இத்தகைய சிதைவுகள் பொதுவாக பூச்சிக்கொல்லிகளின் அதிகப்படியான பயன்பாட்டு காரணங்களால் ஏற்படுகின்றன என கூறப்படுகிறது.