புனித குகையில் தியானம் செய்த பிரதமர் மோடி! வைரலாகும் புகைப்படம்!
பிரதமர் நரேந்திர மோடி 18 மணிநேரம் கேதார்நாத் புனித குகையில் தியானம் செய்த புகைப்படம் இணையத்தில் வெகு வைரலாகி வருகிறது.
பிரதமர் நரேந்திர மோடி 18 மணிநேரம் கேதார்நாத் புனித குகையில் தியானம் செய்த புகைப்படம் இணையத்தில் வெகு வைரலாகி வருகிறது.
பிரதமர் மோடி, தொடர் தேர்தல் பிரச்சாரத்திற்கு பிறகு, நேற்று கேதார்நாத் கோவிலுக்கு சென்று வழிபட்டார். தொடர்ந்து அங்குள்ள புனித குகையில் 18 மணிநேரம் தியானம் செய்தார். அந்த குகையில் குகைக்குள் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு அதை கமாண்டோ படையினர் வெளியில் இருந்து கண்காணித்தும் வந்துள்ளனர்.
இந்நிலையில் அந்த புனித குகைக்குள் பிரதமர் நரேந்திர மோடி தியானம் செய்யும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படமானது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.