Snake Viral Video: நதியில் திடீரென தோன்றிய விஷப்பாம்பு
Snake Video: இந்த வீடியோவில் பாம்பு எப்படி ஆற்றில் இருந்து வெளியேறி நபரின் பின்னால் தொடர்வதை காணலாம்.
பாம்பு என்றாலே பயம் ஏற்படுவது இயல்பான ஒன்று. இதற்கு முக்கிய காரணம் பெரும்பாலான வகையான பாம்புகள் மிகவும் விஷத்தன்மை கொண்டவை, அதனால்தான் மக்கள் அவற்றைக் கண்டு பயப்படுகிறார்கள். பாம்பென்றால் படையும் நடுங்கும் என்று சொல்வார்கள். ஆனால், சமூக ஊடகங்களில் பாம்பு வீடியோ வெளியானால் அவை வைரலாகின்றன. இணைய உலகம் ஒரு வேடிக்கையான உலகம்.
இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. சமீப காலங்களில் பாம்பு வீடியோக்கள் பட்டையை கிளப்பி வருகின்றன. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
மேலும் படிக்க | நாயை தூக்கிச்செல்லும் சிறுத்தை: திகிலூட்டும் சிசிடிவி காட்சிகள்
இந்த நிலையில் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவில், சிலர் ஆற்றில் நீராட வந்ததை காண முடிகிறது. அதே சமயம், சிலர் வெளியில் அமர்ந்து கேமராவில் காட்சியை படம் பிடித்து வருகின்றனர். இதற்கிடையில் ஆற்றில் மிதக்கும் நீளமான பாம்பு ஒன்று நீந்திக் கொண்டிருந்தவர்களின் அருகில் வருகிறது. பார்த்ததும் வெளியில் அமர்ந்திருந்த ஒருவரை குறிவைத்து அவரை நோக்கி நகரத் தொடங்குகிறார். பாம்பு தன்னை நோக்கி வருவதைக் கண்டு மிகவும் பதற்றமடைந்த அந்த நபர் அங்கிருந்து ஓடியுள்ளார்.