ஐயம் பாவம்... ஒரே வெயிலு.. விஷப்பாம்பின் கொடூர வீடியோ வைரல்
Snake Viral Video: தற்போது ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பெருமளவில் வைரலாகி வருகிறது, அதில் ஒரு நபர் தாகத்தால் அவதிப்படும் பாம்புக்கு தைரியமாக தண்ணீர் கொடுப்பதைக் காணலாம்.
பாம்பின் இன்றைய வைரல் வீடியோ: இன்றைய பரபரப்பான உலகில், சமூக ஊடகங்கள் நம் பின்னிப்பிணைந்து வாழ்ந்து வருகிறோம். ஏனெனில் இணையதளம் ஒரு தனி உலகமாக இயங்கி வருகிறது. போதைக்கு அடிமையாகி இருப்பது போல் தற்போது மக்கள் இணையத்திற்கு அடைமையாகி உள்ளனர். ஏனெனில் இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். அத்துடன் இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளையும், தகவல்களையும் வழங்குகின்றன. இதில் முக்கிய விஷயம் என்னவென்றால் இங்கு பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான சில விஷயங்களும் இடம்பெற்றுள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் வன விலங்குகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. அதிலும் பாம்புகள் வீடியோவுக்கு எப்போதுமே மவுசு அதிகம்.
பொதுவாக பாம்புகள் இணையத்தின் ஹீரோக்கள் என்றே கூறலாம். ஏனெனில் பாம்பு வீடியோக்கள் மீது இணையவாசிகளுக்கு எப்போதுமே ஒரு கிரேஸ் இருந்து வருகின்றது. மனிதர்களை அதிக அளவில் கவர்ந்த உயிரினங்களில் பாம்புகளுக்கு மிகமுக்கிய இடம் உள்ளது. அவை உலகின் மிக அஞ்சப்படும் உயிரினங்களில் ஒரு உயிரினமாக கருதப்பட்டாலும், அதன் மீது இருக்கும் சுவாரஸ்யம் குறைவதில்லை. மேலும் சில மரபுகளில், அவை தெய்வங்களாகவும் வணங்கப்படுகின்றன. இவற்றை பற்றிய பல கதைகள் மற்றும் நாட்டுப்புறக் கதைகளும் உள்ளன. இவற்றைப் பற்றி அறிய நாம் இன்னும் ஆர்வமாக இருப்பது இயற்கையானது. அதன்படி பாம்புகளின் பல வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பகிரப்படுகின்றன.
மேலும் படிக்க | Viral Video: குறட்டை விடும் ஹம்மிங் பறவை... காணக் கிடைக்காத வீடியோ!
அந்தவகையில் சமீபத்திலும் ஒரு பாம்பு வீடியோ பகிரப்பட்டு வைரல் ஆகி வருகின்றது. பொதுவாக பாம்பு போன்ற ஆபத்தான உயிரினத்திற்கு யாரும் தண்ணீர் கொடுக்க சற்று யோசிப்பார்கள். அது எவ்வளவு தாகத்தில் இருந்தாலும் சரி பாம்பு என்றே படையே நடுங்க வைக்கும். ஆனால் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவை பாருங்கள், அதில் ஒருவர் நாகப்பாம்புக்கு தண்ணீர் கொடுக்கும் காட்சி இடம்பெற்றுள்ளது.
நாகப்பாம்பின் விஷம் உடலில் வேகமாக பரவும்
நாகப்பாம்பு ஒருவரைக் கடித்தால், அவர் அரை மணி நேரத்தில் இறந்துவிடுவார். ஏனெனில் இதன் விஷம் உடலில் வேகமாக பரவிடும். அதுமட்டுமின்றி இது மிகவும் நச்சு பாம்புகளில் ஒன்றாக கருதப்படுகிறது. அதன்படி இந்த நாகப்பாம்பின் சிறப்பை அறிந்தவர்கள், வீடியோவில் இடம்பெற்றுள்ள இந்த நபர் எவ்வளவு பெரிய ஆபத்தை தன் தலையில் சுமக்கிறார் என்பதை புரிந்து கொண்டு இருப்பார்கள்.
விஷப்பாம்பிற்கு நபர் ஒருவர் தண்ணீர் கொடுக்கும் வீடியோவை இங்கே காணலாம்:
இணையவாசிகள் அந்த நபரைப் பாராட்டினர்
இந்நிலையில் இந்த காணொளியை பார்த்து பலர் வியந்து போய், தண்ணீர் கொடுத்தவரை பாராட்டி வருகின்றனர். அந்த நபர் பாம்புக்கு தண்ணீர் கொடுப்பதை நாம் வீடியோவில் காணலாம். பாம்பும் சத்தமில்லாமல் தண்ணீர் குடித்துக்கொண்டிருக்கிறது. அந்த பாம்பு தண்ணீர் குடிப்பதை பார்த்தால் ரோம்பே நாட்கள் தாகத்தில் தவித்து இருந்துள்ளது. மேலும் வீடியோ கமெண்ட் செக்ஷனில் பலரும் அந்த நபரின் தைரியத்தை பாராட்டி வருகின்றனர்.
(பொறுப்புத் துறப்பு: இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)
மேலும் படிக்க | 'ரத்தத்தின் ரத்தமே' தம்பிகளை காப்பாற்றும் குட்டி சிறுமியின் கியூட் வீடியோ வைரல்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ