Viral Video: குறட்டை விடும் ஹம்மிங் பறவை... காணக் கிடைக்காத வீடியோ!

இயற்கை தன்னுள்ளே பல விதமான அதிசயங்களை கொண்டுள்ளது. அதிசயமான கண்கவர் உயிரினங்கள் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன. அவை ஒவ்வொன்றும் தனித்துவமான அம்சங்களைக் கொண்டுள்ளன. அவற்றில் ஒன்று ஹம்மிங் பறவைகள்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jun 4, 2023, 10:08 PM IST
  • ஹம்மிங் பறவைகள் மிக அழகான வண்ணங்களைக் கொண்டவை.
  • சிறகடித்துக் கொண்டே பூவில் இருந்து தேனை உறிஞ்சி உண்டு வாழ்பவை.
  • ட்விட்டரில் Buitengebieden என்ற கணக்கில் பகிர்ந்த வீடியோ.
Viral Video: குறட்டை விடும் ஹம்மிங் பறவை... காணக் கிடைக்காத வீடியோ! title=

அழகிய பறவைகள் மற்றும் விலங்குகள் எப்போதும் நமக்கு ஆனந்த அதிர்ச்சிகளையும் ஆச்சர்யங்களையும் அள்ளிக் கொடுக்க வல்லன. பறவைகள் அல்லது அழகிய வீட்டு விலங்குகள் தொடர்பான பல வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்யப்படுகின்றன. சில வேடிக்கையானதாகவும், சில வியப்பில் ஆழ்த்துபவையாகவும் இருக்கும். இணைய உலகம் பல வித அற்புதங்களை தன்னுள்ளே கொண்டுள்ள ஒரு வித்தியாசமான உலகமாகும். இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன.  காணக் கிடைக்காத அதிசய காட்சிகளை இணையத்தில் காணலாம்.

இயற்கை தன்னுள்ளே பல விதமான அதிசயங்களை கொண்டுள்ளது. அதிசயமான கண்கவர் உயிரினங்கள் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன. அவை ஒவ்வொன்றும் தனித்துவமான அம்சங்களைக் கொண்டுள்ளன. அவற்றில் ஒன்று ஹம்மிங் பறவைகள். இவை மிக அழகான வண்ணங்களைக் கொண்டவை. இது மட்டுமின்றி பல்வேறு கோணங்களில் பார்க்கும் போது அவற்றின் நிறம் மாறுவது போல் தோன்றும். ஓசனிச்சிட்டுகள் அல்லது ஹம்மிங் பறவை (Hummingbird) என்னும் மிகச் சிறிய பறவைகள்,  சிறகடித்துக் கொண்டே பூவில் இருந்து தேனை உறிஞ்சி உண்டு வாழ்பவை. தற்போது வைரலாகி வரும் வீடியோவில், அதிசய பறவை ஒன்று தனது தலையை உயர்த்தி, இசையாய் குறட்டை விடுவதைக் காணலாம். இது பார்ப்பவரை நிச்சயம்  ஆச்சர்யத்தில் ஆழ்த்தும். அதன் குறட்டையே இளையராஜாவின் இசை போல் இனிக்கிறது என்றால் மிகையில்லை.

காணக்கிடைக்காத அதிசய வீடியோவை இங்கே காணலாம்:

ட்விட்டரில் Buitengebieden என்ற கணக்கில் பகிர்ந்த வீடியோவில், ஹம்மிங் பறவை அழக்காக குறட்டை விடுவதைக் காணலாம். சிறிய பறவை,  குறட்டை விடுவதே ஒரு இசையாகத் தான் இருக்கிறது என்றால் மிகையில்லை. ஓசனிச்சிட்டுகள் அல்லது ஹம்மிங் பறவை (Hummingbird) பறவைகள் வட, தென் அமெரிக்கக் கண்டங்களில் மட்டுமே காணப்படுகின்றன. மனதை கொள்ளும் க்யூட்டான இந்த ஹம்மிங் பறவை தனது வண்ணத்தை மாற்றிக் கொள்ளும் திறன் படைத்தது. ஹம்மிங் பறவை, வேகமாக சிறகுகளை படபடக்கும் போது,  பல்வேறு அழகான கண்கவர் வண்ணங்களை பிரதிபலிக்கிறது.

மேலும் படிக்க | Viral Video: காணக் கிடைக்காத அதிசய காட்சி.. கூடு கட்டும் குருவி..!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News