மும்பை: சமீப காலங்களில் மக்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படங்களில் ‘ஆதிபுருஷ்’ ஒரு முக்கிய படமாகும். தற்போது இது குறித்த ஒரு முக்கிய புதுப்பிப்பு வந்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

'பாகுபலி' (Bahubali) புகழ் ஆக்ஷன் ஹீரோ பிரபாஸ் தனது அடுத்த பிரம்மாண்டமான படமான 'ஆதிபுருஷ்' பற்றி ஒரு அற்புதமான புதுப்பிப்பைப் பகிர்ந்துள்ளார். பிரபாஸ் தனது சமூக ஊடக கணக்கில் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்படும் படத்தின் போஸ்டரைப் பகிர்ந்தார். சைஃப் அலி கான் இப்படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


"#Adipurushaarambh” என்று தனது இன்ஸ்டாகிராம் பதிவில் பிரபாஸ் (Prabhas) எழுதினார். இது படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது என்பதைக் குறிக்கும் வகையில் இருந்தது. இந்த அறிவிப்பு வெளியானதிலிருந்து, இந்த படம் சமூக ஊடகங்களில் பிரபலமாகி வருகிறது.



இந்த அறிவிப்பு வெளியானதிலிருந்தே, ரசிகர்கள் இப்படத்தைப் பற்றி சமூக ஊடகங்களில் பேசி வருகிறார்கள். இந்த படம் சமூக ஊடகங்க (Social Media) டிரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளது.


ஆகஸ்ட் 11, 2022 அன்று திரையரங்குகளில் இந்த பிரம்மாண்ட காவியப் படம் வெளியிடப்படும் என பிரபாஸ் தனது முந்தைய பதிவில் குறிப்பிட்டிருந்தார்.



இந்தி மற்றும் மராத்தி திரைப்பட இயக்குனர் ஓம் ரவுத் இப்படத்தை இயக்குகிறார். மேலும் இந்த படத்தில் பிரபாஸ் ராமர் வேடத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதன் முறையாக பிரபாசுடன் இப்படத்தில் ஓம் ரவுத் இணைந்துள்ளார். 'தன்ஹாஜி: தி அன்சங் வாரியர்' படத்திற்குப் பிறகு சைஃப் அலிகானுடன் இரண்டாவது முறையாக ரவுத் இப்படத்தில் பணிபுரிவார்.


ALSO READ: வெளியானது சுல்தான் படத்தின் டீஸர்... எதிரிகளை அடித்து நொறுக்கும் கார்த்தி..!!!


படத்தின் வகை மற்றும் கதைக்களம் பற்றி இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. ஆனால் இந்த படம் இந்து மத காவியமான ராமாயணத்தை அடிப்படையாகக் கொண்டதாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதேபோல், இந்த படத்தில் சீதையாக நடிக்கவுள்ள பாலிவுட் நடிகை குறித்து உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை.


படத்தின் முக்கிய பெண் கதாபாத்திரத்தில் அனுஷ்கா சர்மா (Anushka Sharma), அனுஷ்கா ஷெட்டி அல்லது கியாரா அத்வானி ஆகியோரில் ஒருவர் நடிக்கக்கூடும் என ஆன்லைன் வெளியீடுகள் தெரிவிக்கின்றன. மும்பை மிரர் அறிக்கையின்படி, விரைவில் வெளிவரவிருக்கும் இந்த 3 டி அதிரடி-ஆக்ஷன் காவிய படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக கிருதி சனோனை தயாரிப்பாளர்கள் இறுதி செய்துள்ளனர்.


இருப்பினும், படக் குழுவிடமிருந்தோ அல்லது கிருதியிடமிருந்தோ இது குறித்த அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் எதுவும் இதுவரை வரவில்லை.


ALSO READ: Watch: ‘வாத்தி கம்மிங்’ பாடலுக்கு அட்டகாச நடனம் ஆடிய TN Players! வைரலான Video!!


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR