Monkey Rescue: அன்பே சிவம் என்பதை நிரூபித்து குரங்குக்கு உயிர் கொடுத்த தமிழன்
காயமடைந்த குரங்கின் வாயில், தனது வாயை வைத்து உயிர்காற்றைக் கொடுக்கும் மனிதாபிமான பிரபு....
இன்றைய உலகில் மனிதாபிமானம் குறைந்துவிட்டது என்ற வருத்தங்கள் இருந்தாலும், அது முற்றிலும் முறிந்துவிடவில்லை என்பதை நிரூபிக்கும் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாகின்றன.
அண்மையில் இணையங்களில் பதிவாகி, நெட்டிசன்களின் இதயத்தை நெகிழச் செய்துள்ள குரங்கு வீடியோ (Monkey video) இது. இந்த வீடியோவில் காயமடைந்த குரங்குக்கு முதலுதவி சிகிச்சை செய்து, அதன் வாயில், தனது வாயை வைத்து உயிர்காற்றைக் கொடுக்கிறார் ஒருவர்.
பெரம்பலூரில் உள்ள குன்னம் தாலுகாவைச் சேர்ந்த 38 வயது நபரான பிரபு, தனது மனிதாபிமான செயலுக்காக சமூக வலைதளங்களில் பாராட்டப்படுகிறார். இது, மனிதர்களுக்கு உதவி செய்யும் மனிதாபிமானல்ல, விலங்குகளும் உயிர்கள் என்பதை மதிக்கும் மனிதனின் மனிதாபிமான வீடியோ.
பெரம்பலூரில் குன்னம் தாலுகாவில் ஒதியம் சமத்துவபுரத்தில் கடந்த டிசம்பர் 9ஆம் தேதி மரத்தின் மீது காயங்களுடன எட்டு மாதமே ஆன குரங்கு மயங்கிக் கிடப்பதைக் கார் ஓட்டுநர் பிரபு பார்த்துள்ளார். மரத்தின் கீழே நாய்கள் குலைத்துக் கொண்டு நின்றிருந்தன.
அதைப் பார்த்த பிரபு, நாய்களை விரட்டிவிட்டு, மரத்தில் இருந்த குரங்கை மீட்டார். அந்தக் குரங்கை நாய்கள் கடித்ததால் பலத்த காயமடைந்த குரங்கு அருகில் இருந்த முள் மரத்தில் ஏறிவிட்டது. அதற்கு தண்ணீர் கொடுத்தாலும், அது கண் விழிக்காமல் மயக்கத்தில் இருந்ததைக் கண்டு, தனது நண்பருடன் குரங்கை இரு சக்கர வாகனத்தில் குரங்கை சிகிச்சைக்காக கொண்டு சென்றார்.
ஆனால் கால்நடை மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே மூச்சு விடுவதற்கு குரங்கு சிரமப்படுவதையும், மருத்துவமனைக்கு செல்வதற்குள் நிலைமை மோசமாகிவிடலாம் என்பதையும் உணர்ந்தார் இளகிய மனம் கொண்ட பிரபு. உடனே வாகனத்தை நிறுத்தச் சொல்லி, கீழே இறங்கி அதற்கு சிபிஆர் எனப்படும் முதலுதவி செய்யத் தொடங்கினார். தனது வாயை, குரங்கின் வாயில் வைத்து மூச்சுக்காற்று கொடுத்து, உயிர் கொடுக்க முயன்றார்.
ALSO READ | குரங்குக்கு காதல் வந்தா என்ன நடக்கும்? இந்த வீடியோவில் பாருங்க!!
அவரது முயற்சி திருவினையானது. குரங்கு விடத் தொடங்கியதும், உடனே வாகனத்தில் அதை அழைத்துச் சென்று மருத்துவமனையில் பிரபு அனுமதித்தார். மருத்துவமனையிலும் உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டது.
குரங்குக்கு குளுக்கோஸ் கொடுத்த மருத்துவமனையினர், பிறகு குரங்கை வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
அன்பே சிவம் என்பதை உணர்த்தும் இந்த தமிழகப் பிரபுவுக்கு சமூக ஊடகங்களில் பாராட்டுகள் குவிந்து வருகிறது.
சரி, குரங்கின் வாயோடு வாய் வைத்து முதலுதவி செய்த பிரபுவுக்கு ஏதாவது பிரச்சனை வருமா? இது பற்றி கருத்து கூறும் மருத்துவ நிபுணர்கள், குரங்கை வெறிநாய் கடித்திருந்தால் நோய் வரலாம். இல்லையெனில் பிரச்னை இல்லை. இருந்தாலும் அவர் முன்னெச்சரிக்கையாக டெட்டனஸ் தடுப்பூசீ போட்டுக் கொள்ள வேண்டும் என்று கூறுகின்றனர்.
ALSO READ | Viral Video: கேமராவில் சிக்கிய நாகப்பாம்பு Vs கீறி சண்டை
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR