யூடியூப்பில் பிராங் வீடியோக்கள் அதிகமாக இருக்கின்றன. அதிக பார்வைகளை பெறுகிறது என்பதற்காக பலரும் இதே டாப்பில் யூடியூப் சேனல் ஆரம்பித்து பிராங்க் செய்து அதனை யூடியூப்பில் பதிவேற்ற தொடங்கினர். இந்த பிராங்க் என்பது நாளுக்கு நாள் அதன் எல்லையைக் கடந்து தனிநபருக்கு மென்டல் டார்ச்சர் கொடுக்கும் அளவுக்கு எல்லாம் சென்றது. ஒருவருக்கு பிடிக்காத வகையில் நடந்து, அவரை கோபப்படுத்தி அதில் நகைச்சுவையை வரவழைப்பது தான் இந்த பிராங்க். இதுபோன்ற வீடியோ எடுப்பவர்கள் மீது பல இடங்களில் புகார்கள் எழுந்துள்ளன. சிலர் அப்போதே உடனுக்குடன் ரியாக்ட் செய்யவும் தயாராகவில்லை.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | படுத்திய பெண், வெச்சி செஞ்ச பசு: குலுங்க குலுங்க சிரிக்க வைக்கும் வைரல் வீடியோ


அதாவது, பிராங்க் செய்தவருக்கே பிராங்க் செய்த ஒருவரின் வீடியோ தான் இப்போது இணையத்தில் வைரலாகியுள்ளது. பிராங்க் குரூப்பை சேர்ந்த இளைஞர் ஒருவர் சாலையில் நடந்து சென்றவரின் பின்னால் சென்று அவரின் காதில் ப்பீப்யை வைத்து சத்தமாக ஊதுக்கிறார். காதை அலறவைக்கும் அளவுக்கு அந்த ஒலி இருக்கிறது. இதனை கேட்ட அந்த நபர் எந்தவித ரியாக்ஷனும் உடனே காட்டாமல் மெதுவாக திரும்பி, எதற்காக என்னுடைய காதில் ஊதுனாய் என கேட்கிறார்.



அப்படி கேட்டுக் கொண்டே அருகில் வந்த அந்த நபர், சற்றும் யோசிக்காமல் பிராங்க் செய்தவரின் கன்னத்தில் பளார் என்று விடுகிறார். இப்படி அடி விழும் என பிராங்க் செய்தவர் சற்றும் எதிர்பார்க்கவில்லை. உடனே பிராங் குரூப்பில் இருந்தவர் சமாதானம் செய்ய அவரின் அருகில் செல்ல அடி கொடுத்தவர், தன் வேலை முடிந்தது என சென்றுவிடுகிறார். அடி வாங்கிய பிராங்க் குரூப்பை சேர்ந்தவர் எதுவும் பேச முடியாமல் திரும்பி வருகிறார். இந்த வீடியோ இணையத்தில் பெரும் வைரலாகியுள்ளது. 


மேலும் படிக்க | 'பச்சக்' என கிஸ் கொடுத்த குரங்கு: ஷாக் ஆன பெண், வேற லெவல் வைரல் வீடியோ


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ