'பச்சக்' என கிஸ் கொடுத்த குரங்கு: ஷாக் ஆன பெண், வேற லெவல் வைரல் வீடியோ

Monkey Viral Video: என்ன இந்த குரங்கு இப்படி செய்து விட்டதே என இணையவாசிகளை கேட்க வைக்கும் வீடியோ ஒன்று வைரல் ஆகி வருகின்றது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Dec 17, 2022, 11:58 AM IST
  • மனதில் நினைத்ததை மறைக்காமல் அப்படியே வெளிப்படுத்திய குரங்கின் ஒரு வீடியோ வைரல் ஆகி வருகின்றது.
  • இதைப் பார்த்தால் யாராலும் நம்ப முடியாது.
  • இந்த வீடியோவில் குரங்கு குழந்தை ஒன்று செய்யும் குறும்பு அனைவரையும் சிரிக்க வைத்துள்ளது.
'பச்சக்' என கிஸ் கொடுத்த குரங்கு: ஷாக் ஆன பெண், வேற லெவல் வைரல் வீடியோ title=

வைரல் வீடியோ: சமூக ஊடக உலகம் ஆச்சரியமான விஷயங்களால் நிரம்பியுள்ளது. இங்கே நாம் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத அனைத்தையும் பார்க்கிறோம். இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. விலங்குகளின் வீடியோகளுக்கென இணையத்தில் ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 

குரங்குகள் பற்றிய வீடியோக்கள் சமூக ஊடகங்களில் அதிக வரவேற்பை பெறுகின்றன. குரங்குகளின் பல வித குறும்புகள் இந்த வீடியோக்களில் நமக்கு காணக்கிடைக்கின்றன. இவற்றில் பல நம்மை வியக்க வைப்பதோடு மனம் விட்டு சிரிக்க வைக்கின்றன. தற்போதும் இது போன்ற ஒரு குரங்கு வீடியோ வைரல் ஆகி வருகின்றது. 

குழந்தைகள் கள்ளம் கபடம் இல்லாதவர்கள் என நம் அனைவருக்கும் தெரியும். மனிதர்களின் குழந்தைகள் மட்டுமல்ல, விலங்குகளின் குட்டிகளுக்கும் இது பொருந்தும். மனதில் நினைத்ததை மறைக்காமல் அப்படியே வெளிப்படுத்திய குரங்கின் ஒரு வீடியோ வைரல் ஆகி வருகின்றது. இதைப் பார்த்தால் யாராலும் நம்ப முடியாது. இந்த வீடியோவில் குரங்கு குழந்தை ஒன்று செய்யும் குறும்பு அனைவரையும் சிரிக்க வைத்துள்ளது.

மேலும் படிக்க | படுத்திய பெண், வெச்சி செஞ்ச பசு: குலுங்க குலுங்க சிரிக்க வைக்கும் வைரல் வீடியோ 

அழகான பெண்ணின் மீது காதல் கொண்ட குட்டி குரங்கு 

சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்த்தால் நம்மால் சிரிப்பை அடக்க முடியாது. ஒரு பெரிய லங்கூர் அமர்ந்திருப்பதையும் அதன் அருகில் ஒரு சிறுமி அமர்ந்திருப்பதையும் இந்த வீடியோவில் காண முடிகின்றது. குரங்கின் குட்டியும் அருகில் அமர்ந்து இருவரையும் பார்த்துக்கொண்டு இருக்கிறது. அந்த பெண் குரங்கு குட்டியை பாசமாக தடவிக்கொடுக்கிறார். ஆனால், பதிலுக்கு சுட்டி குரங்கு செய்த செயல் அந்த பெண்ணையும் ஆச்சரியப்பட வைக்கிறது. 

குரங்கு குட்டி செய்த குறும்பு

பெண் குட்டி குரங்கிடம் பாசம் காட்டத்தொடங்கியவுடன் குரங்கும் தனது பாசத்தை காட்டத் தொடங்குகிறது. ஆனால், அதன் பாசம் வேறு லெவலில் உள்ளது. பெண்ணை பற்றிக்கொள்ளும் அந்த குரங்கு அவரது உதட்டில் முத்தமிடுகிறது. குரங்கு குழந்தையின் இந்த செயலை கண்டு பெண் அதிர்ச்சி அடைகிறார். 

பெண்ணுக்கு குரங்கு கொடுத்த கிஸ்ஸின் வீடியோவை இங்கே காணலாம்:

இந்த வீடியோ ashiq. billota என்ற பெயரில் இன்ஸ்டாகிராமில் பதிவேற்றப்பட்டுள்ளது. இதற்கு ஏகப்பட்ட வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்து வருகின்றன. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள். குரங்கின் இந்த பாசம் காட்டும் விதத்தையும், குறும்பையும் பர்த்து வீடியோவை பார்க்கும் நமக்கும், அதிர்ச்சியாகவும் ஆச்சரியமாகவும் உள்ளது. 

மேலும் படிக்க | 'ஓசி-னா போயிட்டு போயிட்டு வருவியா...' இலவச பேருந்தில் சென்ற மூதாட்டியை திட்டிய நடத்துநர்! 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News