தியாகத் திருநளான பக்ரீத் பண்டிகையையொட்டி இஸ்லாமிய மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இஸ்லாமியர்களால் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகைகளில் ஒன்று ‘பக்ரீத்’ ஆகும். இது ஒவ்வொரு ஆண்டும் இஸ்லாமிய நாட்காட்டியின் 12வது மாதமான துல் ஹஜ்ஜின் 10வது நாளில் கொண்டாடப்படுகிறது. தியாகத் திருநாளாம் பக்ரீத் பண்டிகையையொட்டி பள்ளிவாசல்களில் நடைபெற்ற தொழுகையில் திரளானோர் பங்கேற்றனர். இஸ்லாமியர்கள் புத்தாடை உடுத்தி, பள்ளிவாசல்களுக்கு சென்று தொழுகை நடத்துகின்றனர். பின்னர் இனிப்பு மற்றும் இறைச்சி உணவை பகிர்ந்து உண்ணுவது வழக்கமாக இருந்து வருகிறது.


டெல்லியில் உள்ள ஜும்மா மசூதியில் ஆயிரக்கணக்கானோர் அதிகாலையிலேயே திரண்டனர். டெல்லி காஷ்மீர் கேட்டில் உள்ள பஞ்சா ஷரிப் தர்காவில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் மத்திய மந்திரி முக்தார் அப்பாஸ் நக்வி கலந்துகொண்டு, நமாஸ் செய்தார். 


தியாகத் திருநாளான இன்று இஸ்லாமியர்கள் தொழுகையை முடித்து வீடு திரும்பியதும் இறைவனுக்கு ஆடு, மாடு, ஒட்டகம் உள்ளிட்ட கால்நடைகளை குர்பானி எனப்படும் புனித பலி கொடுக்கின்றனர். அந்த இறைச்சியில் குறிப்பிட்ட பங்கை உறவினர்கள், நண்பர்கள் மற்றும் ஏழைகளுக்கு கொடுத்து மகிழ்கின்றனர். 


மேலும், தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இஸ்லாம் மக்கள் இந்த நாளை தனது உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், தியாகத் திருநளான பக்ரீத் பண்டிகையையொட்டி இஸ்லாமிய மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். 


இது தொடர்பாக டிவிட்டரில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, இஸ்லாமிய பெருமக்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதாக பதிவிட்டுள்ளார். இந்த பக்ரீத் பண்டிகை நம் சமூகத்தில் அமைதி மற்றும் மகிழ்ச்சியின் உணர்வை மேலும் அதிகரிக்கும் என்று நம்புவதாக குறிப்பிட்டுள்ளார்.