தமிழ் திரையுலம் உள்பட நாடுமுழுவதும் இணையத்தில் தேடும் அளவிற்கு ஒரே இரவில் பிரபலமானவர் பிரியா ப்ரகாஷ் வாரியர். மளையள திரையுலகில் விரைவில் வெளியாக இருக்கும் காதல்  திரைப்படம் ‘ஒரு ஆடர் லவ்’. இப்படத்தில் இடம் பெற்றுள்ள 'மாணிக்ய மலரே பூவி' பாடலில் புருவத்தை உயர்த்தி கண் அடித்து இளைஞர்களை சுண்டியிழுத்தார் இவர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இப்பாடலினை ரசிகர்கள் பலரும் தங்கள் பானிக்கு தொகுப்பு செய்து இணையத்தில் வெளியிட்டு பிரபலப் படுத்தினர். இந்த வீடியோவில் இருந்த பிரியா வாரியர் மட்டும் இளசுகளின் மனதினை கொள்ளையடிக்க வில்லை, மற்றொரு நடிகையுமான நூரின் செரிப் என்பவரும் பலரால் நோட்டம் விடப்பட்டார்.


இதையடுத்து, பிரியா வாரியர் என்றாலே இவர் இடம் பெற்றுள்ள கண் சிமிட்டும் பாடல் காட்சிகள் கண் முன்னே தோன்றும் அளவிற்கு இவர் கண் சிமிட்டி ரசிகர்களை கவர்ந்துள்ளார். இந்த பாடல் யூ-டியூப்பில் பார்த்து ரசித்தவர்களின் எண்ணிக்கை சுமார் ரெண்டு கோடியை தாண்டிவிட்டது. இந்தப்பாடலில் பிரியா பிரகாஷ் வாரியரின் புருவம் உயர்த்தும் கண் அடிக்கும் காட்சி சமூக வளைத்ததில் மிகவும் வைரலாகி வந்தது. ஒரே நாளில் சன்னி லியோனையே பின்னுக்குத்தள்ளியாவர் ப்ரியா பிரகாஷ் வாரியர். 


அவருக்கு தற்போது இன்ஸ்டாகிராமில் சுமார் 6.7 மில்லியன் ரசிகர்கள் உள்ளனர். இதை தொடர்ந்து, சியத் ஷாஜகன் மற்றும் நூரின் ஷெரீஃப்-ன் நடிப்பில் ஒரு காதல் நகைச்சுவை படமாக மலையாளத்தில் கடந்த காதலர் தினத்தன்று வெளியானது. இதையடுத்து, இப்படம் தெலுங்கில் வருகின்ற பிப்ரவரி 14 ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. 


பெரும்பாலும், அவர் தனது ரசிகர்களை ஒரு மகிழ்ச்சியான இடத்தில் வைத்து தனது படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து கொள்கிறார். அவரது சமீபத்திய புகைப்படத்தொகுப்பு அவள் இன்னமும் இதயத்தில் ஒரு குழந்தை என்று சொல்கிறது! பிரியா ஒரு பெரிய கரடி வைத்திருப்பதைக் காணலாம். அவளுடைய படங்களை பாருங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளது.