இந்தியாவில் விரைவில் வெளியாகிறது PUBG Lite விளையாட்டு...
இளசுகள் துவங்கி பெரியவர்கள் வரை அனைவரையும் வசப்படுத்தி வைத்திருக்கும் PUBG விளையாட்டின் Lite வெர்ஷன் இந்தியாவில் இந்த மாத இறுதியில் அறிமுகமாக உள்ளது.
இளசுகள் துவங்கி பெரியவர்கள் வரை அனைவரையும் வசப்படுத்தி வைத்திருக்கும் PUBG விளையாட்டின் Lite வெர்ஷன் இந்தியாவில் இந்த மாத இறுதியில் அறிமுகமாக உள்ளது.
Player Unknown’s Battlegrounds (PUBG), இந்த விளையாட்டை குறித்து இந்தியாவில் அறிமுகம் செய்ய தேவையில்லை. அந்த அளவிற்கு எற்கனவே பிரபலமாகி விட்டது. நம்மை சுற்றியிருப்பவர்கள் பலரும் இந்த விளையாட்டின் மோகத்தில் தத்தளித்து வரும் நிலையில் இந்த விளையாட்டிற்கு தடை விதிக்க வேண்டும் என பல மாநிலங்களில் எதிர்ப்பு குரல்கள் எழுந்து அடங்கியாகிவிட்டது.
இதற்கிடையில் தற்போது இந்த விளையாட்டின் லைட் வெர்ஷன் இந்தியாவில் அறிமுகமாகும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஹாங்காங், தைவான், பிரேசில், வங்காளதேசம் ஆகிய நாடுகளை தொடர்ந்து மிகப்பெரிய சந்தையாக விளங்கும் இந்தியாவில் PUBG லைட் வெர்ஷன் இந்த மாதம் 25-ஆம் தேதியன்று வெளியாகும் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதன்படி PUBG விளையாட்டின் Lite வெர்ஷனை பயன்படுத்த அதிக திறன் இல்லாத கணிப்பொறிகள், லேப்டாப்கள் இனி தேவைப்படாது, திறன் குறைந்த கணிப்பொறிகளே போதுமானது.
Minimum System Requirements
OS: Windows 7,8,10 64Bit
CPU: Core i3 @2.4Ghz
RAM: 4GB
GPU: Intel HD 4000
HDD: 4GB
Recommended System Requirements
OS: Windows 7,8,10 64Bit
CPU: Core i5 @2.8Ghz
RAM: 8GB
GPU: Nvidia GTX 660 or AMD Radeon HD 7870
HDD: 4GB