நடைபாதையில் வாகனம் ஓட்டியவர்களை துணிச்சலுடன் எதிர்த்த பெண்மணி!!
நடைபாதையில் வாகனம் ஓட்டி பாதை சாரிகளுக்கு இடையூறு ஏற்படுத்துபவர்களை தனியாளாக துணிச்சலுடன் பெண் ஒருவர் பாடம் கற்றுக் கொடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது!
நடைபாதையில் வாகனம் ஓட்டி பாதை சாரிகளுக்கு இடையூறு ஏற்படுத்துபவர்களை தனியாளாக துணிச்சலுடன் பெண் ஒருவர் பாடம் கற்றுக் கொடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது!
இந்த பறந்து விரிந்த உலகில் ஒவ்வொரு நிமிடமும் ஏதாவது ஒரு மூலையில் விசித்திரமான செயல் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அது, நகைச்சுவையாகவும் இருக்கலாம்; அல்லது அதிர்ச்சி தரக்கூடிய நிகழ்வுகலாவும் இருக்கலாம். அந்த நிகழ்வுகள் அனைத்து இணையதளம் மூலம் நம்மிடம் வந்து சேர்க்கிறது. அது வாழ்நாளில் நம்மால் மறக்க முடியாத நிகழ்வாக கூட அமையலாம். இந்நிலையில், நடைபாதையில் பைக் ஓட்டி, பாதசாரிகளுக்கும், மூத்த குடிமக்களுக்கும் இடையூறு ஏற்படுத்தி வந்தவர்களுக்கு வயதான பெண் ஒருவர் துணிச்சலுடன் பாடம் கற்றுக் கொடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
புனே SNDT கல்லூரி அருகே உள்ள நடைபாதையில் பலரும் தங்களின் பைக்குகளை நிறுத்திச் செல்வதும், சிக்னல் அருகில் உள்ள இந்த நடைபாதையில் பலர் பைக்களை வேகமாக ஓட்டி வருவதையும் வழக்கமாக கொண்டுள்ளனர். இதைத் தடுக்க முயன்றும் புனே போக்குவரத்து போலீசாரின் முயற்சிகள் தோல்வி அடைந்து விட்டன. பைக் ஓட்டிகளால் நடைபாதையில் நடக்க முடியாமல் அவதிப்பட்டவர்களில் நிர்மலா கோகலேவும் ஒருவர்.
வயதான இவர் சமீபத்தில், நடைபாதையின் குறுக்கே நின்று கொண்டு, எதிரே வேகமாக பைக்கில் வந்தவரிடம், தொடர்ந்து நடைபாதையில் செல்ல வேண்டுமானால் என்னை மோதி விட்டு செல். இல்லாவிட்டால் கீழே இறங்கி, சாலையில் பைக்கை ஓட்டிச் செல் என சத்தமாகவும், கடுமையாகவும் பேசினார். இதனை எதிர்பார்க்காத அந்த இளைஞர், நடைபாதையை விட்டு இறங்கி, பைக்கை ஓட்டிச் சென்றார்.
பைக்கர்கள் விதிமுறைகளைப் பின்பற்றாததால், புனே போலீஸைப் பொறுத்து விஷயங்களை தன் கைகளில் எடுத்துள்ளார். புனேவில் நடைபாதையில் கோகலே பைக்கர்களை சவாரி செய்யும் வீடியோ சமீபத்தில் வைரலாகி வருகிறது. ட்விட்டர் கணக்கு, ரோட்ஸ் ஆஃப் மும்பை சமீபத்தில் மேற்கூறிய வீடியோவை "புனேவிலிருந்து வந்த இந்த அத்தை பலருக்கு ஒரு உத்வேகம். நன்றாகச் செய்த மாம். நடைபாதையில் சவாரி செய்யும் பைக்கர்களுக்கு வெட்கமாக இருக்கிறது. மூத்த குடிமக்கள் இதைச் செய்ய வேண்டியது வருத்தமாக இருக்கிறது எங்கள் நாட்டில் போக்குவரத்து போலீசார் என்ன செய்ய வேண்டும் என்று வேலை செய்யுங்கள்".
இந்த வீடியோ 242 K பார்வையாளர்களை எட்டியுள்ளது, 4.1 K-க்கும் மேற்பட்ட லைக்குகள் மற்றும் 1.4 K ரீட்வீட்களைப் பெற்றது. வீடியோவில் உள்ள கருத்துகள் கோகலேவைப் பாராட்டுகின்றன. புனே காவல்துறையினர் கூட அந்த வீடியோவைக் கவனித்து அதைப் பற்றி கருத்து தெரிவித்தனர்.