Puppies Cute Video: சமூக ஊடகங்களில், விலங்குகள் தொடர்பான ஆச்சர்யமான, வேடிக்கையான, தனித்துவமான வீடியோக்களை காணலாம். சிலவற்றை பார்க்கும் போது, மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில உங்களை ஆச்ர்யத்தில் ஆழ்த்தும். சில நேரங்களில் சில வீடியோக்கள் உங்களை உணர்ச்சிவசப் படுத்தும். தற்போது சமூக வலைதளங்களில் இதே போன்ற ஒரு காணொளி வைரலாகி வருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

குளிரில் நடுங்கும் நாய் குட்டிகள் 


வைரலான வீடியோவில் நாய் குட்டிகள் குளிர் காய்வதைக் காணலாம். குளிரில் நடுங்கும் நாய்க் குட்டிகளை பார்த்த கருணை மனம் படைத்த, ​​ஒரு நபர் மனதை தொடும் வகையில், நாய்கள் குளிர் காய, விறர்கு கட்டைகளை எரிக்கிறார். நாய் குட்டிகள் நெருப்பின் அருகே அமர்ந்து, கடும் குளிரில் குளிர் காயும் வீடியோ (Viral Video) மனதை தொடுகிறது.


ALSO READ | Viral Video: சொன்னதை சொல்லும் கிளிப்பிள்ளை இங்கே ‘iPhone’ ட்யூனை இசைக்கிறது..!!


வைரலான வீடியோவில், சில நாய்க் குட்டிகள் குளிரால் நடுங்குவதையும், குளிரில் இருந்து தன்னை காத்துக் கொள்ள நெருப்புக்கு அருகில் அமர்ந்திருப்பதையும் பார்க்கலாம்.  வட இந்தியா முழுவதும் கடுமையான குளிர் நிலவுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதைத் தவிர்க்க மனிதர்கள் வீடு, கம்பிளி, ஹீட்டர்  என தங்களுக்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்துக் கொண்டிருக்கும் நிலையில்,  பல நேரங்களில் விலங்குகள் குளிரைத் தாங்க முடியாமல் உயிரை இழக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.


வீடியோவை இங்கே காணலாம்:


 



 


கடுமையான குளிர் நிலவும் சூழ்நிலையில், நாய்க் குட்டிகள் குளிர் காய தீ மூட்டியவர் உண்மையிலேயே பாராட்டுக்குரியவர்.  இந்த வீடியோ வைரலானதை அடுத்து, தீ மூட்டிய நபரை சமூக வலைதளவாசிகள் பாராட்டி வருகின்றனர். இந்த வீடியோ ஸ்மிதா தேஷ்முக் என்ற ட்விட்டர் கணக்கில் பகிரப்பட்டுள்ளது. இந்த வீடியோவை 1 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர்.


ALSO READ | Viral Video: 'அட நான் தானா அது'; குட்டி குரங்கின் க்யூட் ரியாக்‌ஷன்!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR