Viral Video: 'அட நான் தானா அது'; குட்டி குரங்கின் க்யூட் ரியாக்‌ஷன்!

இணையத்தில் நாம் பார்க்கும் வீடியோக்களில் பல விஷயங்கள் சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் உறையச் செய்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன. 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Jan 16, 2022, 09:00 PM IST
Viral Video: 'அட நான் தானா அது'; குட்டி குரங்கின் க்யூட் ரியாக்‌ஷன்! title=

இணையத்தில் நாம் பார்க்கும் வீடியோக்களில் பல விஷயங்கள் சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் உறையச் செய்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன. பல சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. அந்த வகையில் குரங்கின் இந்த வீடியோ நிச்சயம் உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும்.

குரங்கு மனிதர்களுக்கு மிகவும் நெருக்கமான உயிரினம் என்று நம்பப்படுகிறது. குரங்கில் இருந்து பிறந்தவன் மனிதன் என்ற கூற்று உண்மை தான் என்பதை இந்த வீடியோ உங்களுக்கு உனர்த்தும். பல வகைகளில் மனிதர்களை போலவே செயல்படும் இந்த குரங்குகளின் குறும்புகள் மக்களை மிகவும் சிரிக்க வைக்கின்றன

தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் வீடியோ ஒன்றில், கூட்டமாக இருக்கும் குரங்குகளையும், அது வீடியோ ஒன்றை ரசித்து பார்ப்பதையும் காணலாம்.

வீடியோவை இங்கே காணலாம்: 

 

ALSO READ | Viral Video: இது ‘முட்டை’ இடும் பாம்பு அல்ல; ‘குட்டி’ போடும் பாம்பு..!

குரங்குகளை வீடியோ எடுத்த ஒருவர்,  அதை குரங்குகளிடம் காண்பிக்கிறார். வீடியோவில், ஒருவர் உணவு உண்ணும் போது குரங்குகளை தனது கேமராவில் படம் பிடித்ததைக் காணலாம். அந்த நபர் வீடியோவை எடுத்த பிறகு, குரங்குகளிடம் வீடியோவை காண்பித்த போது சிறிய குரங்கு ஒன்று மொபைலின் அருகில் ஆர்வமுடன் ஓடி வந்ததை காணமுடிகிறது. மொபைல் சாதனத்தை கையில் எடுத்து அதனை முத்தமிட்டதை பார்க்க மிகவும் அழகாக இருந்தது. அருகில் அமர்ந்திருந்த பெரிய குரங்கும் நடந்தவற்றை சீரியஸாகப் பார்க்க ஆரம்பித்தது. தனது வீடியோவை பார்த்த அந்த குட்டி குரங்கின் ரியாக்ஷன் மிகவும் ரசிக்கக் தகுந்தது என்றால் மிகையில்லை.

இந்த வீடியோ எப்போது, ​​​​எங்கிருந்து வந்தது என்பது தெரியவில்லை, ஆனால் இது சமூக ஊடக தளமான Instagram இல் helicopter_yatra என்ற பக்கத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது.

ALSO READ | Viral Video: 'நாங்களும் விளையாடுவோம்’ - பனியில் சறுக்கி ஆட்டம் போடும் யானைகள்..!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News