பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே பிடிபட்ட மலைப்பாம்பை பத்திரமாக வனத்துறையிடம் ஒப்படைத்தனர். பரமக்குடி அருகே உரப்புலி கிராமத்தில் அமைந்துள்ள தனியார் செங்கல் சூலையில் பாம்பு ஒன்று புகுந்துள்ளதாக பரமக்குடி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு தீயணைப்புத் துறையினர் விரைந்தனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தீயணைப்புத் துறையின் அலுவலர் குணசேகரன் தலைமையில் சென்ற தீயணைப்புத் துறையினர் அங்கு இருந்த 15 அடி நீளம் உள்ள மலைப்பாம்பை ஊர் மக்கள் உதவியோடு பத்திரமாக பிடித்தனர்.


மேலும் படிக்க | Viral Video: நீயா... நானா... ஒரு கை பார்த்துடுவோம்! சண்டையில் இறங்கிய யானைகள்!


பின்னர் 15 அடி நீள மலைப்பாம்பை வனத்துறை அலுவலர் பால் பாண்டியிடம் ஒப்படைத்தனர். இவ்வகையான பாம்புகளை ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் விடப்படும் என அப்போது வனத்துறையினர் தெரிவித்தனர்.