சமூக வலைதளங்களில் தினம் தினம் பல வித்தியாசமான, ஆச்சர்யம் அளிக்கும் வகையிலான வீடியோக்கள் வெளியாகி வருகின்றன. தற்போது சமூக வலைதளங்களில், அன்றாட வேலை பளு மற்றும் மன அழுத்தத்திற்கு மத்தியில் மனதை லேசாக்க, மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையிலான வீடியோக்களை பார்ப்பதிலேயே மக்கள் அதிக நேரத்தை செலவிடுகின்றனர். சமூக வலைதளங்களில் தினமும் பகிரப்படும் பல வீடியோக்களில் விலங்குகள், பறவைகள் மற்றும் மீன்களின் வீடியோக்கள் மிகவும் பிரபலமானவை. அதிலும் யானைகள் தொடர்பான வீடியோக்களுக்கு தனி ரசிகர் பட்டாளமே உண்டு. சமூக வலைதளங்களில் வெளியாகும் இந்த வீடியோக்களில் சில நம்மை சிரிக்க வைத்தாலும், சில நம்மை சிந்திக்கவும், அழவும், வியக்கவும் வைக்கின்றன. தற்போது வைரலாக பரவி வரும் இந்த வீடியோ மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகம் வால்பாறை சுற்றியுள்ள தனியார் எஸ்டேட் புது தோட்டம், சக்தி எஸ்டேட், கவர் கல், சிறு குன்றா, சின்னகல்லார், சோலையார்டேம், முடீஸ் பகுதிகளில் காட்டு யானை கூட்டங்கள் அதிக அளவில் உள்ளது. தற்போது கோடை வெயில் தாக்கத்தினால் வனப் பகுதியை விட்டு வெளியேறி காட்டு யானை கூட்டங்கள் நீர் நிலைகளுக்கு வருகிறது. மேலும் கேரளா வனப்பகுதி அருகில் உள்ளதால் யானைக் கூட்டங்கள் இடம் பெயர்ந்து வருகின்றன. இதை அடுத்து பழைய வால்பாறை டாடா டி எஸ்டேட் பகுதியில் இரண்டு காட்டு யானைகள் சண்டை போடும் வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. யானைகள் நடமாட்டம் உள்ளதால் எஸ்டேட் தொழிலாளர்கள் இரவு நேரங்களில் வெளியே வர வேண்டாம் என வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.
யானைகளில் குறும்புகள், சேட்டைகள் தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் அடிக்கடி வைரலாகின்றன. யானைகள் மிகவும் புத்திசாலித்தனமான உயிரினங்கள் எனலாம். யானைகளும் நம்மைப் போலவே எண்ணங்கள், ஆழமான உணர்ச்சிகளை அனுபவிக்கும் திறன் கொண்டவை. முழுமையாக வளர்ந்த யானை ஒரு நாளைக்கு 400 கிலோ வரை உணவையும் சராசரியாக 150 லிட்டர் தண்ணீரையும் உட்கொள்கிறது. யானைகளுக்கு சிறப்பு புத்திசாலித்தனம் இருப்பதாகவும் மக்கள் கூறுகின்றனர்.
மேலும் படிக்க | Viral Video: சிங்கங்களிடம் சிக்கி தவித்த முதலை! வனத்தில் ஒரு உயிர் போராட்டம்!
மேலும் படிக்க | Viral Video: மயக்கும் நடனத்தால் காதலிக்கு தூது விடும் காட்டுக் கோழி!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ