வைரல் வீடியொ: சமூக ஊடக உலகம் ஆச்சரியமான விஷயங்களால் நிரம்பியுள்ளது. இங்கே நாம் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத அனைத்தையும் பார்க்கிறோம். இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. விலங்குகளின் வீடியோகளுக்கென இணையத்தில் ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதன்படி தற்போது இங்கு அப்படிப்பட்ட வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அந்த வீடியோவை பார்த்த மக்கள் முற்றிலும் அதிர்ச்சியடைந்துள்ளனர். மலைப்பாம்பு தொடர்பான வீடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. ஒரு மலைப்பாம்பு மரத்தில் ஏற விரும்புவதையும், பின்னர் அது அதன் வேகத்தை அதிகப்படுத்துவதையும் இதில் காணலாம். சில நொடிகளில் அந்த மலைப்பாம்பு விறு விறுவென மரத்தில் ஏறியது. இதன் போது இந்த மலைப்பாம்பின் வேகத்தைப் பார்த்து அனைவரும் ஆச்சிரியத்தில் ஆழ்ந்தனர்.


மேலும் படிக்க | தூங்கிக்கொண்டே தலைகீழாக விழுந்த பூனை! வைரலாகும் வீடியோ! 


மரத்தில் வேகமாக ஏறிய மலைப்பாம்பு
வைரலாகி வரும் இந்த வீடியோவில், மலைப்பாம்பு மரத்தில் சுற்றியிருப்பதையும், ஒருவேளை இரை தேடி மரத்தின் மேல் முனைக்கு செல்ல விரும்புவதையும் நீங்கள் காண்பீர்கள் . வினோதமான முறையில் உடலைப் போர்த்திக்கொண்டு முன்னேறிக் கொண்டிருந்தது அந்த மலைப்பாம்பு. 


வீடியோவை இங்கே பார்க்கவும்



 கடந்த சில நாட்களில் பல்வேறு சமூக ஊடக தளங்களில் இந்த வீடியோ ஆயிரக்கணக்கான முறை பார்க்கப்பட்டது. இதனை நெட்டிசன்களும் வெகுவாக ரசித்துள்ளனர். மேலும் இந்த வீடியோ @Singh17Nandan என்கிற டிவிட்டர் கணக்கில் பகிரப்பட்டது.