முயல் - ஆமை ஓட்டப்பந்தயம்: கதையல்ல நிஜம்... ஜெயிச்சது யார் தெரியுமா? வைரலாகும் வீடியோ
Rabbit Tortoise Race: கதைகளிலே கேட்ட முயல் - ஆமை ஓட்டபந்தயம் கதையை நிஜத்தில் ஒருவர் செய்திகாட்டியுள்ளார். இதன் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
Rabbit Tortoise Running Race Viral Video: சிறு வயதில் நாம் அனைவரும் கதைக்கேட்டுதான் வளர்ந்திருப்போம். தாத்தா, பாட்டியிடம் புராணக்கதை; அப்பா - அம்மாவிடம் ஊர்க்கதைகள் என பல்வேறு கதைகளை பலவிதங்களில் கேட்டிருப்போம். ஒரு ஊர்ல, ஒரு ராஜா இருந்தாராம் என ஆரம்பிக்கும் எண்ணற்ற கதைகள் கேட்டிருப்பிருப்போம், வாசித்திருப்போம். பாட்டி வடை சுட்ட கதை எந்தளவிற்கு பிரபலமோ அந்தளவிற்கு முயல் - ஆமையின் ஓட்டப்பந்தயம் கதையும் அனைவருக்குமே தெரிந்ததுதான்.
முயல் - ஆமை கதையை நிதானமாக இருக்க வேண்டும் என்பதற்கும் அதே நேரத்தில் விவேகமாகவும் இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக சொல்லப்படும் ஒன்றாகும். ஓட்டப்பந்தயம் ஒன்றை முயலுக்கும், ஆமைக்கும் இடையில் வைத்தால் நிச்சயம் முயல்தான் ஜெயிக்கும் என அனைவருக்குமே தெரிந்ததுதான். ஆனால் வேகமாக ஓடக்கூடிய முயல், அதீத நம்பிக்கையில் பாதி வழியிலேயே தூங்கிவிடும். ஆனால், நிதானமாகவும், விவேகமாகவும் தொடர்ந்து ஓடிக்கொண்டே இருந்த ஆமை வெற்றி பெற்றுவிடும். இது உண்மையாகவே நடந்திருக்கிறதா இல்லையா என்பது யாருக்குமே தெரியாது.
முயல் - ஆமை ரேஸ்: வைரல் வீடியோ
நன்மொழிகளை வலியுறுத்த பெரியவர்களால் கற்பனையாக சொல்லப்படும் கதைகளில் ஒன்றாகவே இது பார்க்கப்படுகிறது. முயல் எப்படி அப்படி நினைத்து தூங்கும், ஆமை அவ்வளவு மெதுவாக சென்று எப்படி வெற்றி பெற முடியும் என்பது லாஜிக்கலாக அனைவரிடமும் இருக்கும் கேள்விதான். இருந்தாலும் அது உண்மையா, பொய்யா என்பதை அறிய ஒருவர் உண்மையாகவே முயலையும், ஆமையும் ஒரு இடத்திற்கு கொண்டு வந்து ஓட்டப்பந்தயம் நடத்தி உள்ளனர். இந்த ரேஸின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மேலும் படிக்க | இப்படி செங்குத்தான மலையில் ஏற முடியுமா? டொயோட்டா லாண்ட் க்ரூசியர் பீஸ்ட் கார்!
அந்த வீடியோவிலும் முயலை ஆமை தோற்கடித்துள்ளது. ஆம், நீங்கள் கதைகளில் கேட்டது உண்மைதான். முயல் ஆமையை விட அதிவேகமாக ஓடும் என்றாலும் இந்த வீடியோவில் அதே ஓடவில்லை. ஆங்காங்கே நடந்துசென்று கவனத்தை வேறு பக்கம் செலுத்தியது. ஆனால், ஆமையா ரேஸ் தொடங்கியதில் இருந்து நிதானமாக ஓடத்தொடங்கி வெற்றி இலக்கையும் அடைந்துவிட்டது. இந்த வீடியோ எங்கு, யாரால் எடுக்கப்பட்டது என தெரியவில்லை. இருப்பினும், இந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவிடப்பட்டு வைரலாகி உள்ளது.