முழங்கால் மாற்று அறுவை சிகிச்சை செய்த தமது சகோதரர் சத்ய நாராயணராவை, நடிகர் ரஜினிகாந்த் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் முதன் முதலாக நடித்து வருகிறார். இப்படத்திற்கு தர்பார் என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து யோகி பாபு, நிவேதா தாமஸ், நயன்தாரா, சுனில் ஷெட்டி, தம்பி ராமையா, ஸ்ரீமன், நவாப்ஷா, ப்ரதீப் பப்பர் ஆகியோர் பலர் நடித்து வருகிறார். மும்பையில் நடைபெற்று வரும் இந்த படப்பிடிப்பில், எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 


இந்நிலையில், முழங்கால் மாற்று அறுவை சிகிச்சை செய்த தமது சகோதரர் சத்ய நாராயணராவை, நடிகர் ரஜினிகாந்த் நேரில் சந்தித்த புகைப்படம் வைரளாகி வருகிறது. நடிகர் ரஜினிகாந்தின் மூத்த சகோதரர் சத்ய நாராயண ராவுக்கு, கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில், முழங்கால் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. 


இந்நிலையில், தர்பார் படப்பிடிப்புக்காக ஜெய்ப்பூரில் இருந்த ரஜினிகாந்த், பெங்களூருவுக்கு சென்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சத்ய நாராயணாவை சந்தித்து நலம் விசாரித்தார். மருத்துவர்களுடன் ரஜினிகாந்த் எடுத்துக் கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.