ரஜினி - அக்ஷய் குமார் நடிப்பில் உருவான `2.0' திரைப்படம் 400 கோடி ரூபாய் வசூல் ஈட்டியுள்ளதாக லைக்கா நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது!  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் ரஜினி நடிப்பில் பிரமாண்டமாக உருவான `2.0'. இத்திரைப்படம் கடந்த 29 ஆம் தேதி பிரமாண்டமாக வெளியானது. சுமார் உலகம் முழுவதும் 4000 தியேட்டர்களில் ரிலீஸான இந்தத் திரைப்படம் மக்களிடம் வரவேற்பு பெற்று ஓடிக்கொண்டிருக்கிறது. 


இப்படத்தில் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் வில்லனாக நடித்துள்ளதால் வட இந்தியாவிலும் படத்துக்கான வரவேற்பு கிடைத்து வருகிறது. விமர்சனங்கள் ஒருபுறம் இருந்தாலும், ஷங்கரின் பிரமாண்டத்தை மக்கள் பார்த்து வருகின்றனர். இதற்கிடையே, படம் வெளியாகி நான்கு நாள்களில் சுமார் 400 கோடி ரூபாய்க்கும் அதிகமான வருமானம் ஈட்டியுள்ளதாகத் தயாரிப்பு நிறுவனமான லைக்கா அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. 


இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள லைக்கா நிறுவனம்; ``வரலாறு மாற்றி எழுதப்படுகிறது. 2.0 படம் நான்கு நாள்களில் 400 கோடி ரூபாய்க்கும் அதிகமான வருமானம் ஈட்டியுள்ளது. இது சாதாரண பிளாக் பஸ்டர் கிடையாது. மெகா பிளாக் பஸ்டர்" எனக் கூறியுள்ளது. 


இந்த இன்பச்செய்தியையும் ரஜினி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். ஏற்கெனவே ரஜினி - ஷங்கர் காம்போவில் உருவான எந்திரன், சிவாஜி படங்கள் வசூலில் சாதனை நிகழ்த்தியதுபோல் தற்போது 2.0 படமும் சாதனை படைத்து வருகிறது. இந்நிலையில், 2.0 வின் தயாரிப்பு நிறுவனமான லைக்கா புரோடக்ஸ்சன் இன்று 2.0 படத்தின் ஸ்நீக் பீக் வெளியிடுவதாக அதிகாரப்பூர்வமான அறிவித்திருந்த நிலையில், தற்போது லைக்கா நிறுவனம் அதை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.