புதுடெல்லி: தந்தையுடன் தான் கொண்டாடிய தீபாவளியின் கோலாகலமான புகைப்படங்களை ரஜினிகாந்தின் மகள் செளந்தர்யா இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தீபாவளியை பாரம்பரிய முறையில் மனைவி லதா, மகள் செளந்தர்யா, மருமகன் விசாகன் வனங்கமுடி மற்றும் பேரன் வேத் ஆகியோருடன் கொண்டாடினார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தங்கள் தலைவரின் புகைப்படங்களை பகிர்ந்துள்ள செளந்தர்யாவுக்கு ரசிகர்கள் நன்றி தெரிவித்துக் கொண்டுள்ளனர்.


"எங்கள் குடும்பத்தின் சார்பில் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள். இந்த தீபாவளியை பாதுகாப்பாகவும், நல்ல முறையிலும் கொண்டாடுங்கள். அன்பையும் நேர்மறையையும் பரப்புங்கள் .. சர்வவல்லமையுள்ள கடவுளை நம்புங்கள், சரணடையுங்கள். கடவுளும் குருக்களும் எப்போதும் நம்மை ஆசீர்வதிப்பார்கள்" என்று செளந்தர்யா தனது தீபாவளி வாழ்த்துப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.



ரஜினிகாந்த் தனது குடும்பத்தினருடன் பட்டாசுகளை வெடித்து ரசிப்பதைப் பார்த்து அனைவரும் மகிழ்கின்றனர். ரஜினிகாந்த் கேமராவுக்கு மகிழ்ச்சியுடன் போஸ் கொடுப்பதைபார்க்க முடிகிறது.  
ரஜினிகாந்த் மற்றும் அவரது குடும்பத்தின் தீபாவளி கொண்டாட்டங்களின் காட்சிகளைப் பாருங்கள்.


செளந்தர்யாவின் இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் வெளியான இந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாவதற்கு காரணம் அதில் இருப்பது மக்களின் மனம் கவர்ந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்பதைத் தவிர வேறென்ன?  


வழக்கமாக தீபாவளிக்கு வெளியாகும் திரைப்படங்கள் தீபத் திருநாளின் ஒரு முக்கியமான கொண்டாட்டமாக கருதப்பட்டது. பல நாட்களுக்கு முன்னரே டிக்கெட் புக்காகிவிடும். மிகவும் அதிக விலை கொடுத்தும் தீபாவளி ரிலீஸ் திரைப்படங்களை பார்க்க ரசிகர்கள் துடிப்பார்கள்.


தீபாவளிக்கு ரிலீசாகும் திரைப்படங்களின் எண்ணிக்கையும் அதிகமாக இருக்கும். சூப்பர் ஸ்டாரின் திரைப்படம் மற்றும் தல அஜித், இளைய தளபதி விஜய் போன்றவர்களின் திரைப்படங்கள் வெளியாகி சக்கைப் போடு போடும் என்பதை வரலாறாக மாற்றிவிட்டது கொரோனா வைரஸ்.


ரஜினிகாந்த் கடைசியாக நடித்து வெளியான திரைப்படம் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியான 'தர்பார்' தான்.  இதில் ரஜினிகாந்த், நயன்தாரா, நிவேதா தாமஸ், மற்றும் சுனில் ஷெட்டி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். 
ரஜினியின் 168 ஆவது திரைப்படமாக உருவாகி வருகிறது அண்ணாத்த. மீனா, குஷ்பூ, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ் ராஜ், சூரி, சதீஷ் உள்ளிட்ட பல பிரபலங்கள் அண்னாத்த திரைப்படத்தில் நடிக்கின்றனர்.


Also Read | தளபதி விஜய் இன் 'மாஸ்டர்' டீசர் படைத்த சாதனை....!


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR